(இ
- ள்.) நறியநெய் ஆதி - நறுமணங் கமழும் நெய் முதலாக, நறும்
ஆரக் குழம்பு ஈறா ஆட்டி - நறிய சந்தனக் குழம்பு இறுதியாக உள்ள
இவற்றால் அபிடேகித்து, வெறிய கர்ப்புர நீர் ஆட்டி - மிக்க
மணத்தினையுடைய கர்ப்புர நீரினால் ஆட்டி, அற்புத வெள்ளம் பொங்க -
அன்பின் பெருக்கு மேன்மேலெழ, இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான்
- சோமசுந்தரக் கடவுளை வியப்புடன் தரிசித்துத் துதிப்பவன், எறிநீர்
வையைத் துறைவ - அலைவீசும் வையையாற்றின் நீர்த் துறையையுடைய
பெருமானே, நீ என் கர்ப்பூர சுந்தரனோ என்றான் - நீ அடியேனுடைய
கர்ப்பூர சுந்தரனோ என்று துதித்தான் எ - று.
ஆதியாக
ஈறாக உள்ளவற்றால் என விரிக்க. வெறிய - மணமுடைய :
குறிப்புப் பெயரெச்சம். சிறப்பு நோக்கிக் கர்ப்புரத்தைப் பிரித்துக் கூறினார்.
அற்புதம் - ஈண்டு அன்பு; இன்பமுமாம்; இறைவனது அழகாகிய வெள்ளம்
பெருக என்னலுமாம். அன்புரிமையால் 'என்' என்றான். ஓகாரம் வியப்பின்
கண் வந்தது. (3)
பூசனை புரியு மெல்லைப் பொன்னகர்க் கிறைமை பூண்ட
வாசவன் வருடந் தோறும் பூசித்து வருவா னன்ன
காசறு மனத்தான் பூசை கழிவுறு மளவுந் தாழ்த்துத்*
தேசமை சிறப்பார் பூசை செய்துதன் னாடு புக்கான். |
(இ
- ள்.) பூசனை புரியும் எல்லை - இங்ஙனம் பூசை செய்யும்
பொழுது, வருடம் தோறும் பூசித்து வருவான் - ஆண்டுகள் தோறும்
(சித்திரைத் திங்களின் சித்திரை நாளில்) பூசித்து வருபவனாகிய, பொன்
நகர்க்கு இறைமை பூண்ட வாசவன் - பொன்னுலகத்திற்குத் தலைமை பூண்ட
இந்திரனானவன், அன்ன காசு அறு மனத்தான் பூசை கழிவுறும் அளவும்
தாழ்த்து - அந்தக் குற்றமற்ற உள்ளத்தினையுடைய பாண்டியனது பூசை
முடியும் வரை தாமதித்து (முடிந்தபின்), தேசு அமை சிறப்பு ஆர் பூசை
செய்து - விளக்கமமைந்த சிறப்புமிக்க பூசையைச் செய்து முடித்து, தன் நாடு
புக்கான் - தனது நாட்டிற்குச் சென்றான் எ - று.
வருவான்
: வினையாலணையும் பெயர். வருவானாகிய வாசவன் எனக்
கூட்டுக. அமை பூசை ஆர் பூசையெனப் பெயரெச்ச முதனிலைகளைத் தனித்
தனி கூடுக. (4)
அன்றுநீர்க்
கடவுள் வேள்வி நாயக னவையத் தெய்தி
நின்றவன் றன்னோய் தீருஞ் செவ்வியி னிகழ்ச்சி தோன்றக்
குன்றவன் சிறக ரீர்ந்த கொற்றவன் முகத்தை நோக்கி
இன்றுநீ சிறிது தேம்பி யிருத்தியா லிதென்கொ லென்றான். |
(இ
- ள்.) அன்று - அப்பொழுது, நீர்க்கடவுள் - வருணதேவன்,
வேள்வி நாயகன் அவையத்து எய்தி நின்றவன் - வேள்வித் தலைவனாகிய
இந்திரனது அவையின்கட் சென்று நின்று, தன் நோய் தீரும் செவ்வியின்
நிகழ்ச்சி தோன்ற - தனது நோயானது நீங்கும் பருவத்தின் நிகழ்ச்சி கைகூட,
குன்றவன் சிறகர் ஈர்ந்த கொற்றவன் முகத்தை நோக்கி - மலைகளின் வலிய
சிறைகளையறுத்த இந்திரன் முகத்தை நோக்கி, இன்று நீ சிறிது தேம்பி
(பா
- ம்.) * தாழ்ந்து.
|