இருத்தி - இன்று நீ
சற்று வாடியிருக்கின்றாய், இது என் என்றான் -
இதற்குக் காரணம் யாது என்று வினவினன் எ - று.
வேள்வி
நாயகன் - மகபதி. நின்றவன் : முற்றெச்சம். நோய் - வயிற்று
நீர் நோய் என்பர். நிகழ்ச்சி - ஏதுத்தோற்றம். சிறகர் : ஈற்றுப் போலி. ஆல்,
கொல் என்பன அசைகள். இதென் : விகாரம். (5)
சிலைப்படு முகிலூ ரண்ணல் செப்புவா னிருடீ ரன்பின்
வலைப்படு பெருமா னெம்மான் மதுரையெம் பிரானை யன்பு
தலைப்படு பூசை செய்யத் தாழ்த்ததின் றதனா லிப்போ
தலைப்படச் சிறிதெ னுள்ள மாகுல மடைந்த துண்டால். |
(இ
- ள்.) சிலைப்படும் முகில் ஊர் அண்ணல் - வில்லுடன் கூடிய
முகிலை ஊர்தியாகக் கொண்டு நடாத்தும் பெருமையினையுடைய இந்திரன்,
செப்புவான் - சொல்லுவான், இருள் தீர் அன்பின் வலைப்படு பெருமான்
எம்மான் மதுரை எம்பிரானை - மயக்கத்தினீங்கிய அன்பாகிய
வலையிற்படுகின்ற பெருமானும் எம்மானும் மதுரைப் பிரானுமாகிய
சோமசுந்தரக் கடவுளை, அன்பு தலைப்படு பூசை செய்ய இன்று தாழ்த்தது -
அன்போடு கூடிய பூசனை புரிய இன்று (வழுதியால்) காலந் தாழ்த்தது;
அதனால் - அக் காரணத்தால், இப்போது என் உள்ளம் சிறிது அலைப்பட -
இப்பொழுது என் மனம் சிறிது அலைவுற, ஆகுலம் அடைந்தது உண்டு -
துன்பமெய்தியதுண்டு எ - று.
சிலை
- திருவில்; இந்திரவில். செப்புவான் - செப்புகின்றவன் எனப்
பெயராகக் கொள்க; செப்புதல் - விடையிறுத்தல். அன்பின் வலைப்படுதலை.
"பத்திவலையிற்
படுவோன் காண்க" |
என்னும் திருவாசகத்தா
னறிக. ஆல் : அசை. (6)
என்னவவ் விலிங்கந் தான்மா விலிங்கமோ வென்று முந்நீர்
மன்னவன் வினவ லோடு மகபதி மொழிவான் முன்பென்
றன்னரும் பழியும் வேழச் சாபமுந் தொலைத்த தன்றோ
அன்னதை யறிந்தி லாய்கொ லென்னநீ ரண்ணல் கூறும். |
(இ
- ள்.) என்ன - என்று இந்திரன் கூற, அ இலிங்கம் மா
இலிங்கமோ என்று முந்நீர் மன்னவன் வினவலோடும் - அந்தச்
சொக்கலிங்கம் (ஏனைய பதிகளின் இலிங்கங்களைவிடச்) சிறந்த இலிங்கமோ
என்று கடல் மன்னனாகிய வருணன் கேட்ட வளவில், மகபதி மொழிவான் -
இந்திரன் கூறுவான், முன்பு - முன்னாளில், என் அரும் பழியும் -
என்னுடைய போக்குதற்கரிய பழியையும், வேழச்சாபமும் தொலைத்தது
அன்றோ - வெள்ளை யானையின் சாபத்தையும் போக்கியதல்லவா,
அன்னதை அறிந்திலாய் கொல் என்ன - அச்செய்தியை நீ அறியாயோ
என்று செப்ப, நீர் அண்ணல் கூறும் - வருணன் கூறுவான் எ - று.
மா
இலிங்கம் - மகாலிங்கம். பிறவாற்றாற் போக்குதற்கரிய
பழியென்பான், 'அரும்பழி' என்றான். அன்னதை - அவ்விலிங்கத்தின்
மேன்மையையென்றுமாம். தான், தன் என்பன அசைகள். (7)
|