I


712திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அற்றது வாகிற் றெய்வ மருத்துவ ராலுந் தீரச்
செற்றிட வரிதா யென்னைத் தெறும்பெரு வயிற்று நோயை
வற்றிடு மாறு தீர்க்குங் கொல்லென வலாரி யையம்
உற்றுநீ வினாய தென்னென் றுண்ணகை யரும்பிச் சொல்வான்.

     (இ - ள்.) அது அற்று ஆகில் - அவ்விலிங்கம் அத்தன்மையை
யுடையதானால், தெய்வ மருத்துவராலும் தீரச்செற்றிட அரிதாய் - தேவ
மருத்துவர்களாலும் முற்றக் கெடுத்தற்கு அரியதாய், என்னைத் தெறும் பெரு
வயிற்று நோயை - என்னை வருத்துகின்ற பெரிய வயிற்று நோயை,
வற்றிடுமாறு தீர்க்கும் கொல் என - ஒழியும்படி தீர்க்குமோ என்று வினவ,
வலாரி - இந்திரனானவன், நீ ஐயம் உற்று வினாயது என் என்று - நீ
சந்தேகித்து வினவியது என்னையென்று, உள் நகை அரும்பிச் சொல்வான் -
புன் முறுவல் செய்து கூறுவான் எ - று.

     தெய்வ மருத்துவர் - அச்சுவினி தேவர். தீர - முற்ற; நீங்க என்றுமாம்.
ஐயுற்றதுதகாதென்பான், 'ஐயமுற்று நீ வினாயதென்' என்றான்.
உண்ணகையரும்பல் அவனது அறியாமை பற்றிய எள்ளலால் நிகழ்ந்தது;

"எள்ளல் இளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப"

என்பது தொல்காப்பிய மெய்ப்பாட்டியல். (8)

அரியய ராலுந் தீராப் பிறவிநோ யறுக்க வல்ல
பெரியவ னிந்த யாக்கைப் பெரும்பணி பிறவுந் தீர்த்தற்
கரியனோ வையன் செய்யுந் திருவிளை யாட்டை யின்னே
தெரியநீ சோதி யென்னத் தெண்கடற் சேர்ப்பன் சொல்வான்.

     (இ - ள்.) அரி அயராலும் தீராப் பிறவி நோய் அறுக்கவல்ல
பெரியவன் - திருமால் பிரமர்களாலும் நீங்காத பிறவி நோயினைப்
போக்கவல்ல பெரியவனாகிய சொக்கலிங்க மூர்த்தி, இந்த யாக்கைப் பெரும்
பிணி பிறவும் தீர்த்தற்கு அரியனோ - இந்த உடலிலுள்ள பெரிய பிணியையும்
பிற நோயையும் போக்குதற்கு அரியவனோ, ஐயன் செய்யும்
திருவிளையாட்டை இன்னே தெரிய நீ சோதி என்ன - இறைவன் செய்யும்
திருவிளையாடலை இப்பொழுதே விளங்க சீ சோதிப்பாய் என்று கூற, தெண்
கடல் சேர்ப்பன் சொல்வான் - தெளிந்த கடற்கிறைவனாகிய வருணன் கூறுவான் எ - று.

     அரியயர் : உம்மைத் தொகை. பிணியும் பிறவுமென்க. தெரிய - உணர
வென்றுமாம். சேர்ப்பன் - நெய்தற்றலைவன். (9)

கல்லிற கரிந்தோ யிங்கு நான்வருங் காலை வேட்டார்க்
கெல்லையில் காம நல்குஞ் சுரபியு மின்பால் சோரப்
புல்லிய கன்று மாற்றுப் பட்டவப் போது கண்ட
நல்லசோ பனத்தா லிந்த நன்மொழி கேட்டே னென்னா.