(இ
- ள்.) கல் இறகு அரிந்தோய் - மலைகளின் சிறைகளை அரிந்த
இந்திரனே, இங்கு நான் வருங்காலை - இங்கு யான் வரும் பொழுது,
வேட்டார்க்கு விரும்பினாருக்கு, எல்லை இல் காமம் நல்கும் சுரபியும் -
அளவிறந்த விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுக்கும் தேனுவும், இனபால்
சோரப் புல்லிய கன்றும் - இனிய பால் ஒழுக (அதனால்) தழுவப்பட்ட
கன்றும், ஆற்றுப்பட்ட - வழியில் எதிர்ப்பட்டன; அப்போது கண்ட நல்ல
சோபனத்தால் - அப்பொழுது பார்த்த அந்த நல்ல சகுனத்தால், இந்த
நல்மொழி கேட்டேன் என்னா - இந்த நல்ல சொல்லைக் கேட்டேனென்று
கூறி எ - று.
காமம்
- விருப்பம்; விரும்பிய பொருள்கள். காம நல்குஞ் சுரபி -
காமதேனு. புல்லிய : செயப்பாட்டு வினைப்பொருளது. பட்ட : அன்பெறாத
பலவின் பால் முற்று. சோபனம் - ஈண்டு நிமித்தம். பாற்பசுவும் கன்றும் எதிர்
வருதல் விரும்பியவற்றைப் பெறுதல் காட்டும் நன்னிமித்தமென்க. (10)
வருணனு மேகி வெள்ளி மன்றுடை யடிகள் செய்யுந்
திருவிளை யாடல் கண்டு வயிற்றுநோய் தீர்ப்பா னெண்ணி
முரசதிர் மதுரை மூதூர் முற்றுநீ யழித்தி யென்னாக்
குரைகட றன்னை வல்லே கூறினா னேவி னானே. |
(இ
- ள்.) வருணனும் ஏகி - வருணனானவன் சென்று, வெள்ளி மன்று
உடை அடிகள் செய்யும் திருவிளையாடல் கண்டு - வெள்ளியம்
பலத்தையுடைய பெருமான் செய்யும் திருவிளையாடலைப் பார்த்து, வயிற்று
நோய் தீர்ப்பான் எண்ணி - வயிற்று நீர் நோயை நீக்கிக் கொள்ளக் கருதி,
குரை கடல் தன்னை வல்லே கூவினான் - ஒலிக்கின்ற கடலை விரைய
அழைத்து, முரசு அதிர் மதுரை மூதூர் முற்றும் நீ அழித்தி என்னா ஏவினான்
- முரசுகன் ஒலிக்கின்ற தொன்மையுடைய மதுரைப் பதியை முழுதும் நீ
அழிப்பாயென்று ஏவினான் எ - று.
தீர்ப்பான்
: வினையெச்சம். அழித்தி : ஏவலொருமை முற்று; த் :
எழுத்துப் பேறு, இ : விகுதி. கூவினான் : முற்றெச்சம். கண்டு, தீர்ப்பான்,
எண்ணி, கூவினான் என்னும் வினையெச்சங்கள் முறையேய ஒன்று
ஒன்றனைக் கொண்டன. (11)
[கொச்சகக்கலிப்பா]
|
கொதித்தெழுந்து
தருக்களறக்
கொத்தியெடுத் தெத்திசையும்
அதிர்த்தெறிந்து வரைகளெல்லா
மகழ்ந்துதிசைப் புறஞ்செல்லப்
பிதிர்த்தெறிந்து மாடநிரை
பெயர்த்தெறிந்து பிரளயத்தில்
உதித்தெழுந்து வருவதென
வோங்குதிரைக் கடல்வருமால். |
|