I


714திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) ஒங்கு திரைக்கடல் - (அப்பொழுது) உயர்ந்த
அலைகளையுடைய கடலானது, கொதித்து எழுந்து - பொங்கி மேலெழுந்து,
தருக்கள் அறக் கொத்தி எடுத்து - மரங்கள் முறியக் கல்லி எடுத்து,
அதிர்த்து எத்திசையும் எறிந்து - ஆரவாரித்து எல்லாத் திசைகளிலும் வீசியும்,
வரைகள் எல்லாம் அகழ்ந்து பிதிர்த்து திசைப்புறம் செல்ல எறிந்து -
மலைகளை யெல்லாம் தோண்டிப் பொடி செய்து திசைப்புறங்களிற்
செல்லுமாறு வீசியும், மாட நிரை பெயர்த்து எறிந்து - மாட வரிசைகளைப்
பெயர்த்து வீசியும், பிரளயத்தில் உதித்து எழுந்து வருவதென வரும் -
ஊழிக்காலத்திற் பொங்கிமேலெழுந்து வருவது போல வாரா நின்றது எ - று.

     பிதிர்த்து - பொடியாக்கி; பிதிர் - பொடி. உதித்தல் - பொங்குதல்
என்னும் பொருட்டு. ஆல் : அசை. (12)

கந்தமலர்த் தனிக்கடவுள் கற்பத்து மழியாத
இந்தவளம் பதிக்கிடையூ றெய்தியதெம் பதிக்குமினி
வந்ததெனச் சுந்தரனை வந்திறைஞ்சி வானவருஞ்
சிந்தைகலங் கினர்வருணன் செய்தசெய றெளியாதார்.

     (இ - ள்.) வானவரும் - தேவர்களும், வருணன் செய்த செயல்
தெளியாதார் - வருணன் செய்த சூழ்ச்சியினை அறியாதவர்களாய், கந்த
மலர்த் தனிக் கடவுள் கற்பத்தும் அழியாத - மணம் பொருந்திய தாமரை
மலரில் இருக்கும் ஒப்பற்ற பிரமனது கற்பத்தினும் அழியாத, இந்த வளம்
பதிக்கு இடையூறு எய்தியது - இந்த வளம் பொருந்திய மதுரைக்கும் அழிவு
வந்தது; இனி எம்பதிக்கும் வந்தது என - இனி எமது பதிக்கும் அழிவு
வந்தது என்று கருதி, சிந்தை கலங்கி வந்து சுந்தரனை இறைஞ்சினர் - மனங்
கலங்கி வந்து சோமசுந்தரக் கடவுளை வணங்கினார்கள் எ - று.

     'கற்பத்தும் அழியாத இந்த வளம்பதி' என்றமையால், எம்பதி கற்பத்தில்
அழிவதென்றவாறாயிற்று. வளம் பதிக்கும் என்னும் உயர்வு சிறப்பும்மை
தொக்கது. எம்பதிக்கும் இடையூறு வந்தது என விரித்துரைக்க; வந்ததென :
காலவழுவமைதி. வானவரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பும் எச்சமுமாம்.
கலங்கி இறைஞ்சினர் என விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. தெளியாதார் :
முற்றெச்சம். (13)

குலமோ டழலேந்துஞ் சொக்கர்திரு விளையாட்டின்
சீலமோ நாமிழைத்த தீவினையின் றிறமிதுவோ
ஆலமோ வுலகமென மழியவரும் பேரூழிக்
காலமோ வெனக்கலங்கிக் கடிநகரம் பனிப்பெய்த.

     (இ - ள்.) இது குலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திருவிளையாட்டின்
சீலமோ - இந்நிகழ்ச்சி சூலப்படையையும், அங்கியையும் ஏந்திய
சொக்கலிங்கப் பெருமானது திருவிளையாட்டின் செய்கையோ, நாம் இழைத்த
தீவினையின் திறமோ - (அன்றி) நாம் செய்த தீவினையின் பாகுபாடோ,
ஆலமோ - (தேவர்களை அழிக்க வந்த) கொடுவிடமோ, உலகம் எலாம்
அழிய வரும் பேர் ஊழிக்காலமோ - உலக முழுதும் அழியும்படி வரும்