I


வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்715



பெரிய ஊழிக் காலமோ, என - என்று, கடி நகரம் - காவலையுடைய மதுரை
நகரிலுள்ளாரனைவரும், கலங்கி பனிப்பு எய்த - கலக்கமடைந்து நடுக்கமுறா
நிற்க எ - று.

     உலகமுழுதும் அழித்தலையும் ஒரு திருவிளையாடலாக
உடையவரென்பது தோன்றச் 'சூலமோ டழலேந்துஞ் சொக்கர்' என அடை
கொடுத்தார். சீலம் - தன்மை : செய்கை. இது திறமோ எனப் பிரித்தியைக்க.
நகரம் : ஆகுபெயர். (14)

மண்புதைக்கத் திசைபுதைக்க மயங்கிருள்போல் வருநீத்தம்
விண்புதைக்க வெழுமாட வியனகரின் புறத்திரவி
கண்புதைக்க வருமளவிற் கண்டரச னடுநடுங்கிப்
பெண்புதைக்கு மொருபாகப் பிரானடியே சரணென்னா.

     (இ - ள்.) மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கு இருள் போல் வரு
நீத்தம் - மண்ணுலகை மறைக்கவும் திசைகளை மறைக்கவும் மயங்குதற்
கேதுவாகிய இருளைப் போல் வருகின்ற கடல்வெள்ளம், விண் புதைக்க எழு
மாட வியன் நகரின் புறத்து - விண்ணுலகை மறைக்குமாறு மேல் ஓங்கிய
மாடங்களையுடைய மதுரை நகரின் புறத்தில், இரவி கண்புதைக்க வருமளவில்
- பரிதியும் அச்சத்தாற் கண்ணை மூடுமாறு வரும் பொழுது, அரசன் கண்டு
நடு நடுங்கி - அபிடேக பாண்டியன் அதனைப் பார்த்து மிக நடு நடுங்கி,
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா - உமைப்
பிராட்டியால் மறைக்கப்பட்ட ஒரு பாகத்தினையுடைய பெருமானுடைய
திருவடிகளே அடைக்கலம் என்று கருதி எ - று.

     புதைக்க என்பவற்றுக்குப் புதையவெனப் பொருள் கூறலுமாம்.
இப்பொருளில் கு சாரியை; புதைய - மறைய. இருள் போலும் நீத்தம்
இருளையோட்டும் இரவியும் கண் புதைக்க வரும் என்ற நயம் உணர்தற்
பாலது. பிராட்டி ஒரு கூறாக இருத்தலைப் பிராட்டியால் மறைக்கப்பட்ட ஒரு
கூற்றினையுடைய என்றார். பெருமானது திருவடியன்றி வேறு புகலிடமில்லை
யென்பான் பிரிநிலையும் தேற்றமுமாகிய ஏகாரங் கொடுத்து 'அடியே சரண்'
என்றானென்க. இச் செய்யுள்,

"தேரொலிக்க மாவொலிக்கத் திசையொலிக்குந் திருக்காஞ்சி."

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் போன்று ஓசையின்பமும்
சொல்லழகும், பின் வருநிலையணியும் உடைத்தாய் விளங்குவது காண்க.
(15)

ஆலமெழுந் திமையவர்மே லடர்க்கவரும்* பொழுதஞ்சும்
மாலெனவுந் தன்னுயிர்மேன் மறலிவரும் பொழுதஞ்சும்
பாலனென வுங்கலங்கிப் பகுபதிசே வடியில் விழுந்
தோலமென முறையிட்டா னுலகுபுக ழுறையிட்டான்.

     (இ - ள்.) உலகு புகழ் உறையிட்டான் - உலகத்தார் புகழும்
புகழாகிய கவசத்தையணிந்த அபிடேக பாண்டியன், ஆலம் எழுந்து அடர்க்க


     (பா - ம்.) * அடரவரும்.