I


74திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



ஒல்லொ லிக்கதிர்ச் சாலிகள் புறந்தழீ இயோங்க
மெல்லி லைப்பசுங் கொடியினால் வீக்குறு பூகம்
அலலெ னுங்களத் தண்ணற னணிவிழாத் தருப்பைப்
புல்லொ டும்பிணிப் புண்டபொற் கொடிமரம் போலும்.

     (இ - ள்.) ஒல் ஒலி - ஒல் என்ற ஒலியையுடைய, கதிர்ச்சாலிகள் -
கதிர்களையுடைய நெற்பயிர்கள், புறம் தழீஇ ஓங்க - புறத்தின் கண்
பொருந்திய உயர்ந்து நிற்க, மெல் இலைப் பசும் கொடியினால் - பசிய
வெற்றிலைக் கொடியினால், வீக்குறு பூகம் - கட்டப்பட்ட பாக்கு மரமானது,
அல் எனும் களத்து - இருள் போலுந் திருமிடற்றினையுடைய, அண்ணல்
தன் அணிவிழா - பெருமை பொருந்திய சிவபிரானுடைய திருவிழாவின்
கண், தருப்பைப் புல்லொடும் - தருப்பைப்புற் களோடும், பிணிப்புண்ட -
கட்டப்பெற்ற, பொன் கொடி மரம் போலும் - பொன்னாலாகிய
கொடிமரத்தை ஒக்கும் எ - று.

     மெல்லிலை - வெற்றிலை; இதனை யறியாத சிலர் மெல்லிய
இலைகளையுடைய எனப் பொருள் கூறுவர்; அவர் பூகம் என்பதனுடன்
இணைத்துக் கூறிய நயத்தினையும் நோக்கிற்றிலர்;

"மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியும்
மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு
பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும்
ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகு பண்டியும்"

என்னும் சிந்தாமணிச்செய்யுளுரையில், நச்சினார்க்கினியர, மெலலிலைப்
பண்டியும் என்பதற்கு ‘வெற்றிலை பெய்த பண்டியும் எனப் பொருள் கூறி,
‘மெல்லிலை - வினைத் தொகை’ எனக் குறிப்பெழுதி யிருப்பதுங் காண்க.
கொடிமரம் - துவசத் தம்பம். பாக்கு மரம் கொடி மரத்தையும், பாக்கு
மரத்தைத் தழுவிய கதிர்ச்சாலிகள் கொடிமரத்தின் புறத்தே பொருந்திய
தருப்பைப் புல்லையும், சாலியுடன் பாக்குமரத்தைச் சுற்றியுள்ள
வெற்றிலைக்கொடி புல்லுடன் கொடிமரத்தைப் பிணித்துள்ள கயிற்றையும்
ஒக்குமென்றவாறு. சாலியும் வெற்றிலையும் பூகமும் நெருங்கியிருக்கு மென்க.
ஒல்லொலி - ஒலிக்குறிப்பு. தழீஇ : தழுவி என்பதன் விகாரம். கொடியினால்,
ஆல் : வினை முதற் பொருளில் வந்தது. (8)

சீத வேரியுண் டளிமுரல் கமலமேற் செருந்தி
போத வேரியு மலர்களுஞ் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செங்கரம் விரித்துவாள் மனுக்கள்
ஓத வேமமும் உதகமும் உதவுவா ரனைய.

     (இ - ள்.) சீதவேரி உண்டு - குளிர்ந்த தேனைப்பருகி, அளிமுரல் -
வண்டுகள் ஒலிக்கப்பெற்ற, கமலம் மேல் - தாமரை மலரின்மேல், வேரியும்
மலர்களும் - தேனையும் பூக்களையும், போத சொரிவன - மிகச்
சொரிவனவாகிய, செருந்தி - செருந்தி மரங்கள், புத்தேள் வேத வேதியர் -
தெய்வத்தன்மை பொருந்திய மறைகளை யுணர்ந்த மறையோர், செங்கரம்
விரித்து - சிவந்த கைகளை விரித்து, வாய் மனுக்கள் ஓத - வாயினால்