மந்திரங்களைச் சொல்ல,
ஏமமும் உதகமும் - (அவா கையில்) பொருளையும்
(தத்தஞ் செய்யும்) நீரையும், உதவுவார் அனைய - கொடுப்பாரை ஒத்தன
எ - று.
போத
- மிக; நிரம்பிய வழி அமைவுண்டாமாகலின், அமையும்
அமையா என்னுங் கருத்தில் போதும் போதா என வழங்கும் வினை
விகற்பங்களும் நோக்குக. மணிவாசகரும் ஒன்றும்
போதா நாயேனை
என்றார். போத என்பது போர எனவும் திரிந்து வழங்கும். மனு - மந்திரம்;
உதவுவாரனைய என்பதற்கேற்பச் சொரிவன வாகிய செருந்தியென்க. ஏமமும்
உதகமும் என்பதற்கேற்ப மலர்களும் வேரியும் என மாற்றிக் கொள்க.
வண்டினொலி, கமலம், மலர், வேரி, செருந்தி என்பவற்றுக்கு மந்திரவொலி,
பார்ப்பனர்கை, பொன், நீர் உதவுவோர் என்பன முறையே உவமங்களாம்.
வேதமென முன்வந்தமையின் வேதியரென்பது பெயர் மாத்திரையாய்
நின்றது. (9)
விரைசெய் பங்கயச் சேக்கைமேற் பெடையொடு மேவி*
அரச வன்னநன் மணஞ்செய வம்புயப் பொய்கை
திரைவ ளைக்கையா னுண்டுளி செறிந்தபா சடையாம்
மகர தக்கலத் தரளநீ ராசனம்+வளைப்ப. |
(இ
- ள்.) விரைசெய் - மணம் வீசும், பங்கயச் சேக்கைமேல் -
தாமரை மலராகிய சேக்கையின்மேல், அரச அன்னம் - அரச அன்னப்
பறவையானது, பெடையொடும் மேவி - பெண் அன்னத்தோடும் பொருந்தி,
நன்மணம் செய - நல்ல மணத்தைச் செய்யா நிற்க, அம்புயப் பொய்கை -
தாமரைத் தடாகங்களாகிய (மகளிர் கூட்டம்), திரை விளைக்கையால் -
அலைகளாகிய (சங்கு) வளையுள்ள கைகளால், நுண் துளி தரளம் செறிந்த
- துண்ணிய நீர்த்துளிகளாகிய முத்துக்கள் நெருங்கிய, பாசடையாம்
மரகதக்கலம் - பசிய இலையாகிய மரகதத் தட்டின்கண், நீராசனம் வளைப்ப
- ஆலத்தி சுற்றா நின்றன எ - று.
சேக்கை
- தங்குமிடம், படுக்கை. அரச வன்னம் - அன்னங்களிற்
சிறந்தது. பங்கயம் - சேற்றிலுதிப்பது, அம்புயம் - நீரிலுதிப்பது காரண
விடுகுறிப் பெயர்கள். பொய்கை என்பது மானுடராக்காத நீர் நிலை என்று
கூறுவர் நச்சினார்க்கினியர்; வழக்கில்
பொதுவாகத் தடாகத்தைக்
குறிக்கின்றது. வளை திரைக்கும் கைக்கும் பொது. முத்துப்போலுமாகலின்
தரளம் என்றார். பசுமை அடை பாசடை யாயிற்று. அது மரகதம் போறலின்
மரகதக்கலம் என்றார். செல்வப் பெருக்கினால் மரகதக் கலத்து முத்து
நீராசனம் வளைப்ப என்பது தோன்றக் கூறினார். நிரினை யேற்ற பாசடை
திரையால் அலைவதை ஆலத்தி சுழற்றுவதாகக் கூறினார். ஏகதேசவுருவகம்.
(10)
இரும்பி
னன்னதோள் வினைஞரார்த் தெறிந்துவாய் மடுக்குங்
கரும்பு தின்றிடி யேற்றொலி காட்டியின் சாட
சுரும்பு சூழ்கிடந் தரற்றிடச் சொரிந்துஞெ் சினத்தீ
அரும்பு கட்களி றொத்தன வாலையெந் திரங்கள். |
(பா
- ம்) * பெடையோடும் விரவி. +நீராஞ்சனம்.
|