(இ
- ள்.) ஆலை எந்திரங்கள் - ஆலையாகிய எந்திரங்கள்,
இரும்பின் அன்னதோள் - இரும்பையொத்த வலியதோள்களையுடைய,
வினைஞர் ஆர்த்து - மள்ளர்கள் ஆரவாரித்து, எறிந்து - தறித்து,
வாய்மடுக்கும் - (தமது) வாயிற் கொடுக்கின்ற, கரும்புதின்று - கரும்புகளை
நெரித்து, இடி ஏற்று ஒலிகாட்டி - இடியேற்றின் முழக்கத்தைத் தோற்று
வித்து, சுரும்பு சூழ்கிடந்து அரற்றிட - வண்டுகள் சூழ்ந்து கிடந்து ஒலிக்க,
இன்சாறு சொரிந்து - இனிய சாற்றைப் பொழிந்து, வெம்சினத் தீ அரும்பு -
வெவ்விய வெகுளித் தீ உண்டாகின்ற, கண் களிறு ஒத்தன -
கண்களையுடைய யானைபளை ஒத்தன எ - று.
களிற்றுக்
கேற்ப வினைஞரென்பதற்குப் பாகரென உரைத்துக் கொள்க.
ஆலை கரும்பு தின்றலாவது கரும்பினை நெரித்தல். ஏனைய களிற்றுக்கும்
ஆலைக்கும் பொது. ஆலை - கரும்பினைச் சாறு பிழியும் பொறி:
ஆலையாகிய எந்திரமென இருபெயரொட்டு. இரும்பினன்ன : சாரியை நிற்க
உருபு தொக்கது. (11)
பள்ள நீர்குடைந்* தஞ்சிறைப் பாசிபோர்த் தெழுந்த
வெள்ளை யன்னத்தைக் காரன+மெனப்பெடை வீழ்ந்த
உள்ள மீட்டல மரச்சிற குதறியுள் ளன்பு
கொள்ள வாசையிற் றழீஇக்கொடு குடம்பைசென் றணையும். |
(இ
- ள்.) பள்ளம் நீர்குடைந்து - ஆழமாகிய நீரில் மூழ்கி, அம்
சிறை - அழகிய சிறைகள், பாசிபோர்த்து - நீர்ப்பாசியினாற் போர்க்கப்
பட்டு, எழுந்த வெள்ளை அன்னத்தை - மேலெழுந்த வெள்ளிய
அன்னச்சேவலை, கார் அனம் என - காகமெனக் கருதி, வீழ்ந்த உள்ளம்
மீட்டு - விரும்பிய உள்ளத்தைத் திருப்பிக்கொண்டு, பெடை அலமர -
அன்னப்பேடு சுழலா நிற்க, சிறகு உதறி - (அவ்வன்னச் சேவல்) சிறைகளை
விதிர்த்துப் (பாசிகளை வீழ்த்தி), உள் அன்கொள்ள உளத்தில் அன்பு
நிறைய, ஆசையின் - ஆசையால், தழீஇக்கொடு - (அவ்வன்னப் பேட்டைத்)
தழுவிக் கொண்டு, குடம்பை சென்று அணையும் - கூட்டினுட் போய்ச்
சேரும் எ - று.
பாசி
- பசுமையுடையதெனக் காரணப் பெயர். போர்த்து -
போர்க்கப்பட்டு, எருமையைக் காரான் என்பதுபோலக் காகத்தைக்
காரனமென்றார். கரிய அன்ன மென்பாருமுளர். வெள்ளை கருமை என்பன
முரண். எனக் கருதி மீட்டென்க. அங்குள்ள பறவைகளும் கற்பு
நெறிப்பட்டன என்றார். வீழ்ந்த என்னும் பெயரெச்சம் வினை முதற்
பெயர்கொண்டது. (12)
இரவி யாழியொன் றுடையதே ரீர்த்தெழு மிமையாப்
புரவி நாநிமிர்த் தயில்வன பொங்கர்வாய்த் தளிர்கள்
+கரவி லார்மகத் தெழுபுகை கற்பக நாட்டிற்
பரவி வாட்டுவ பனியெனப் பங்கயப் பொய்கை. |
(இ
- ள்.) இரவி - சூரியனின், ஆழி ஒன்று உடைய தேர் - ஓர்
உருளையையுடைய தேரை, ஈர்த்து எழும் - இழுத்துச் செல்லாநின்ற,
(பா
- ம்.) * நீர்க்குடைந்து. +காரண்டம். +கரவிலா.
|