இமையாப் புரவி -
இமையாத நாட்டத்தையுடைய குதிரைகள், பொங்
கர்வாய்த் தளிர்கள் - சோலைகளின் தளிர்களை, நா நிமிர்ந்து அயில்
வன - நாக்களை நீட்டித் தின்னா நிற்பன; கரவு இலார் - வஞ்சகமில்லாத
மறையோரால் (வேட்கப்படுகின்ற), மகத்து எழு புகை - வேள்வியினின்று
வானுலகில், பரவி - பரம்பி, பங்கயப்பொய்கை - (அங்குள்ள) தாமரத்
தடாகத்தை, பனி என வாட்டுவ - பனிபோலும் வாட்டா நிற்பன எ - று.
இமையாப்புரவி
- இமையா நாட்டமுடைய புரவி; வானோர்க்குக்
கண்ணிமையாவாகலின் பரிதிவானவன் புரவிக்கும் கண்ணிமையா என்றார்.
பொங்கர் தம்மினும் மேல் நிவந்திருத்தலின் நாநிமிர்த்த யில்வன என்றார்.
வானுலகில் பொழுது வேற்றுமை யின்மையின் பனியென என்றார். பங்கயப்
பொய்கை என்றாரேனும், வாட்டுவ என்பதற் கியையப் பொய்கையிலுள்ள
பங்கய மென்க. தொடர் புயர்வு நவிற்சி.
(13)
அகழி
|
பிறங்கு மாலாவா
யகத்துளெம் பிரானரு ளால்வந்
தறங்கொ டீர்த்தமா யெழுகட லமர்ந்தவா நோக்கிக்
கறங்கு தெண்டிரைப் பெரும்புறக் கடலும்வந் திவ்வூர்ப்
புறங்கி டந்ததே போன்றது புரிசைசூழ் கிடங்கு. |
(இ
- ள்.) புரிசை சூழ் கிடங்கு - மதிலைச் சூழ்ந்துள்ள அகழியானது,
பிறங்கும் ஆலவாய் அகத்துள் - விளங்குகின்ற மதுரைப் பதியின்கண்,
எம்பிரான் - எம்பிரானாகிய சோமசுந்தரக் கடவுளின், அருளால் -
திருவருளால், எழுகடல் - ஏழு கடல்களும், வந்து அறம் கொள் தீர்த்தமாய்
- வந்து அறவடிவாகிய தீர்த்தமாகி, அமர்ந்தவா நோக்கி - அமர்ந்த
தன்மையை நோக்கி, கறங்கு தெண் திரை - ஒலிக்கின்ற தெளிந்த
அலைகளையுடைய, பெரும்புறக் கடலும வந்து - பெரும்புறக் கடலும்
இங்குப் போந்து, இவ்வூர்ப்புறம் கிடந்தது போன்றது - இந்நகரின்
புறத்திலமர்ந்ததை ஒத்தது எ - று.
தீர்த்தம்
- வினைமாசு கழுவுந் தூயநீர். எழுகடலாவன, - உவர்
நீர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ் சாற்றுக்கடல்,
மதுக்கடல், நன்னீர்க்கடல் என்பன. ஏழுதீவுகளில் ஒவ்வொன்றின்
புறஞ்சூழ்ந்து கிடக்கும், இவற்றின் புறத்தே சக்கர வாளகிரியும், அதன்
புறத்தே பெரும்புறக்கடலும் சூழ்ந்துகிடக்கும். இவற்றைக் கந்தபுராணத்து
அண்டகோசப் படலத்தில்,
"பரவுமிவ் வுலகிலுப்புப் பால்தயிர்
நெய்யே கன்னல்
இரதமா மதுநீராகு மெழுகட லேழுதீவும் வரன்முறை
விரவிச்சூழு மற்றதற் கப்பாற் சொன்னத்
தரையது சூழ்ந்துநிற்குஞ் சக்கர வாளச் சையம்" |
என வருதலானறிக. எழுகடலும்
வந்து அமர்ந்தமையை இப்புராணத்து
எழுகடலழைத்த படலத்தானறிக. தானும் தீர்த்தமாவான் வந்துகிடந்ததே
போன்றதென்க. எழுகடலும்; என்னுமும்மை தொக்கது. அமர்ந்தவா :
ஈறுகெட்டது. (14)
|