என மணிமேகலை
கூறுவதானு மறிக. கராம் - முதலையின் சாதிபேதம்.
"கொடுந்தாண் முதலையும் இடங்கருங் கராமும்" எனக் குறிஞ்சிப் பாட்டில்
வருதல் காண்க. முழுமுதற் பொருளாகிய சிவபெருமானுடன் ஏனைத்
தேவரைச் சேர்த்தெண்ணுதல் பொருந்தாதென்பதனை,
"சாவமுன்
னாட்டக்கன் வேள்ளித் தகர்தின்று நஞ்சமஞ்சி
ஆவவெந் தாயென் றவிதா விடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே" |
என வாதவூரடிகள் இரங்கிக்
கூறுவதாலறிக. இருளாகிய நரக மென்க. இருள்
- நரக வகையுளொன்று; "அடங்காமை ஆரிருளுய்த்துவிடும்" என்பதற்கு
பரிமேலழகரெழுதிய உரையுங்காண்க. ஏறினும்
என்பது ஏறாரென்பதுபட
நின்மையின் எதிர்மறை யும்மை. (16)
குமிழ லர்ந்தசெந்
தாமரைக் கொடிமுகிழ் கோங்கின்
உமிழ்த ரும்பர ஞானமுண் டுமிழ்ந்தவாய் வேதத்
தமிழ றிந்துவை திகமுடன் சைவமு நிறுத்தும்
அமிழ்த வெண்டிரை வையையு மொருபுறத் தகழாம். |
(இ
- ள்.) குமிழ் அலர்ந்த - குமிழம்பூ மலர்ந்த, செந்தாமரை -
செந்தாமரை மலரையுடைய, கொடி - கொடியின்கண், முகிழ கோங்கின் -
முகிழ்த்த கோங்கரும்பினின்றும், உமிழ்தரும் - பொழிந்த, பரஞானம உண்டு
- சிவஞானத்தைப் பருகி, வாய் உமிழ்ந்த - (திருஞான சம்பந்தப்
பெருமானார்) திருவாயால் வெளியிட்டருளிய, வேதத்தமிழ் அறிந்து -
வேதமாகிய தமிழின் பெருமையையறிந்து, வைதகமுடன் - வேதநெறியோடு,
சைவமும் நிறுத்தும் - சைவநெறியையும் நிரை பெறச் செய்த, அமிழ்த
வெண்திரை - அமிர்தம்போலும் வெள்ளிய அலைகளையுடைய, வையையும்
- வையையாறும், ஒருபுறத்து அகழாம் - (மதிலின்) ஓர் பக்கத்துள்ள
அகழியாம் எ - று.
குமிழ்,
தாமரை யென்பன அவற்றின் மலருக்கும், கோங்கு என்பது
அதன் அரும்புக்கும் ஆகு பெயர். குமிழ் மூக்கிற்கும், செந் தாமரை
முகத்திற்கும், கொடி திருமேனிக்கும், கோங்கு தனத்திற்கும் உவமமாவன;
அவற்றையே மூக்கு முதலியவாகக் கூறினார்; கேட்டோர்க்கு மகிழ்ச்சி
யுண்டாமாகலின். குமிழாகிய கோட்டுப்பூ நீர்ப் பூவாகி தாமரையுள்
அலர்தலும், அதனைக் கொடி உடைத்தாதலும், அதன்கண் கோங்கமரத்தின்
அரும்பு இருத்தலும் என்னுமிவையும் அபூதமாய் இன்பம் பயத்தல் காண்க.
கோங்கின் உமிழ்தரும் பரஞானம் என்றது உமையம்மையார் தமது
திருத்தனத்தினின்றும் கறந் தருளிய பாலுடன் கலந்த சிவஞானம் என்க.
இதனை,
"வாரிணங்கு
திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி" |
எனவும், |
"எண்ணரிய சிவஞானத்
தின்னமுதங் குழைத்தருளி" |
எனவும் திருத்தொண்டர்
புராணங் கூறுதலானறிக. உண்டருளி பர
ஞானமே தமிழ் வேதமாக வெளிப்போந்ததென்பார் உண்டுமிழ்ந்த வாய்
வேதத் தமிழ்
|