சிலம்பும் - ஒலிக்கின்ற,
அடிகள் போற்றி - திருவடிகள் காக்க எ - று.
இருப்பு
மனம் எனற்பாலது மெலிந்து நின்றது; இரும்பு தரு
மனத்தேனை யீர்த்தீத்தெ னென்புருக்கி எனவும். இருப்பு நெஞ்ச வஞ்ச
னேனை யாண்டு கொண்ட நின்னதாள் எனவும் ஆளுடையவடிகள்
கூறுவன இங்கே சிந்திக்கற்பாலன. முதற்கட் குழலையும் ஈற்றின்கண்
அடிகளையும் கூறியது எல்லா அங்கங்களையும் அகப்படுத்துப் பரவுங்
குறிப்பினாலென்க.
பரசிவம்
[கலிநிலைத்துறை]
|
பூவண்ணம்
பூவின் மணம்போல மெய்போத மின்பம்*
ஆவண்ண மெய்கொண்ட டவன்றன் வலியாணை தாங்கி
மூவண்ண றன்சந் நிதிமுத் தொழில்செய்ய வாளா
மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம். |
(இ
- ள்.)
பூவண்ணம் பூவின்மணம் போல - பூவும் அதன் நிறமும்
அதன் மணமும் பிரிப்பின்றி நிற்றல் போல, மெய் போதம் இன்பம் -
உண்மை அறிவு ஆனந்தம் இம்மூன்றும் பிரியாது, மெய் ஆம் வண்ணம்
கொண்டவன் - திருமேனி ஆகும் வண்ணம் கொண்டவனும், தன்வலி
ஆணை தாங்கி - தனது சத்தியின் ஏவலையேற்று, மூவண்ணல் - அயர்
அரி அரன் என்னும் மும்மூர்த்திகளும், தன் சந்நிதி - தனது திருமுன்னே,
முத்தொழில் செய்ய - ஆக்கல் அளித்தல் அழித்தலாகிய மூன்று
தொழில்களையும் செய்யா நிற்க, வாளா மேவு அண்ணல் - அசைவின்றி
நிற்கும் பெருமையுடையவனுமாகிய, அன்னான் - அவ்விறைவனின்,
விளையாட்டின் - திருவிளையாடல்களைக் கூறுதலினாலே, வினையை
வெல்வாம் - வினையாகிய பகையை வெல்வாம் எ - று.
வலி
- சத்தி. தாங்கி என்றது முடிமேற் கொண்டென்றபடி.
இறைவனுடைய சத்தியால் முத்தொழிலும் நடைபெறுமென்பதனை.
"உரைத்தவித்
தொழில்கண் மூன்று முவருக் குலக மோத
வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின்
விரைக்கம லத்தோன் மாலு மேவலான் மேவி னோர்கள்
புரைத்ததி கார சத்தி புண்ணிய நண்ண லாலே" |
என்னும் சிவஞான
சித்தியாலறிக. (5)
சிற்சித்தி
|
அண்டங்க
ளெல்லா மணுவாக வணுக்க ளெல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்
அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்
அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர் |
(பா
- ம்.) * மெய்ப்போத வின்பம்.
|