I


80திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



என்றார்; இதனானே அபரஞான மெனப்படும் மற்றைக் கலைகளினும்
தமிழ்வேதம் சிறந்ததாதலும் பெறப்படும். வாய் என்பதனை முன்னே கூட்டுக;
வாய்வேதம் - உண்மைவேதம் என்னலுமாம். திருஞானசம்பந்தப் பெருமான்
சமணர்களோடு வாது நிகழ்த்துங் காலையில் பாசுரம் எழுதியிட்ட
திருவேடானது வையையில் எதிரேறிச் சென்றதாகலின், அதன் பெருமையை
வையை அறிந்ததெனக் கொண்டு ‘தமிழறிந்து’ என்றும், அதனால்
பிள்ளையார் திருவவதாரத்தின் நோக்கமாகிய வேதநெறி தழைத்தோங்கலும்,
மிகு சைவத் துறை விளங்கலும் நிறைவேறினமையின், அதனை அதன்மே
லிட்டு ‘வைதிகமுடன் சைவமு நிறுத்து’ என்றுங் கூறினார். பாசுர மாவது;

"வாழ்க வந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழக தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே" என்பது. (17)

பிள்ளை யும்பெடை யன்னமுஞ் சேவலும் பிரியாக்
கள்ள முண்டகச் செவ்வியாற் கண்வர் கண்ணும்
உள்ள முந்திரும் பாவகை சிறைப்படுத் தோங்கும்
புள்ள லம்புதண் கிடங்கிது புரிசையைப் புகல்வாம்.

     (இ - ள்.) பிள்ளையும் பெடை அன்னமும் சேவலும் - பார்ப்பும்
அன்னப்பேடும் சேவலும், பிரியா - நீங்காத, கள்ள - தேனையுடைய,
முண்டகம் - தாமரை மலர்களின், செவ்வியால் - அழகினால், கண்டவர் -
பார்த்தவர்களின், கண்ணும் உள்ளமும் - கண்களும் மனமும், திரும்பா
வகை - மீளாவண்ணம், சிறைப்படுத்து - அகப்படுத்தி, ஓங்கும் -
மேன்மையுற்ற, புள் அலம்பு - பறவைகள் ஒலிக்கப்பெறுகின்ற, தண் கிடங்கு
இது - குளிர்ந்த அகழி இத்தன்மையது; புரிசையைப் பகர் வாம் - (இனி)
மதிலின் பெருமையைக் கூறுவாம் எ - று.

     பிள்ளை - பறவையின் இளமைப்பெயர்; ‘பார்ப்பும் பிள்ளையும்
பறப்பவற்றிளமை’ என்பது மரபியல். பெடையன்னமென இடை நிற்றலின்
அன்னப்பார்ப்பும் அன்னச் சேவலுமென்க. புள் - வண்டுமாம். கள்ள -
குறிப்பு வினைப்பெயரெச்சம். (18)

                 மதில்
மாக முந்திய கடிமதின் மதுரைநா யகர்கைந்
நாக மென்பதே தேற்றமந் நகர்மதில் விழுங்கி
மேக நின்றசை கின்றதவ் வெஞ்சினப் பணிதன்
ஆக மொன்றுதோ லுரிபட நெளிவதே யாகும்.

     (இ - ள்.) நாகம் உந்திய - வானுலகை ஊடறுத்துச் சென்ற, கடிமதில்
- காவலாயுள்ள மதிலானது, மதுரை நாயகர் - மதுரேசராகிய சோமசுந்தரக்
கடவுளின், கைந்நாகம் என்பதே தேற்றம் - கையிலணிந்த