பாம்பென்பதே துணிபு;
அந்நகர் மதில் விழுங்கி - அந்நகரின் மதிலை
மறைத்து, மேகம் நின்று அசைகின்றது - முகிலானது தங்கி அசைகின்றது,
அவ்வெம் சினப்பணி - அந்த வெவ்விய சினத்தினையுடைய பாம்பானது,
தன் ஆகம் ஒன்று தோல் - தனது உடலோடு பொருந்திய தோல், உரிபட
நெளிவது ஆகும் - உரிபடும் பொருட்டு நெளிகின்றதை ஒக்கும் எ - று.
முந்திய
எனப்பிரித்து முந்துற்றுச் சென்ற என்னலுமாம். சிவ பெருமான்
கையிலணிந்திருந்த கங்கணமாகிய பாம்பினால் நகரின் எல்லை காட்டப்
பெற்றமையின் மதிலை நாகமென்றார். பாம்பு எல்லை காட்டியதனை
இப்புராணத்தே திருவாலவாயான படலத்திற் காண்க. என வென ஒரு சொல்
வருவித்து, மேகமென நின்றசைகின்றது நெளிவதேயாகும் ஆகலின்
நாகமென்பதே தேற்றம் என முடித்தலுமாம். (19)
புரங்க டந்தபொற் குன்றுகோ புரமெனச் சுருதிச்
சிரங்க டந்தவர் தென்னரா யிருந்தனர் திருந்தார்
உரங்க டந்திட வேண்டினு முதவிசெய் தவரால்
வரங்க டந்திடப் பெறவெதிர் நிற்பது மானும்.
|
(இ
- ள்.) புரம்கடந்த பொன் குன்று - திரிபுரத்தை வெல்லுதற்கு
வில்லாயிருந்த மேருமலையானது, சுருதிச் சிரம் கடந்தவர் - மறை முடியைக்
கடந்தவராகிய இறைவர், தென்னராய் இருந்தனர் - பாண்டி மன்னராய்
இருந்தனர் (ஆதலின்), திருந்தார் உரம் கடந்திட வேண்டினும் - வலிய
பகைவர்களை வெல்லுதற்கு (இன்னும்) வேண்டியிருந்தாலும், உதவி செய்து -
உபகரித்து, அவரால் - அவ்விறைவரால், வரங்கள் தந்திடப்பெற - வரங்கள்
அருளப்பெற, கோபுரம் என - கோபுரம் என்று சொல்ல, எதிர் நிற்பது
மானும் - எதிர் நிற்றலை ஒக்கும் எ - று.
பகைவரின்
வலியை அடக்க என்னலுமாம். வேண்டினும் என்னும்
உம்மை முன் வேண்டியிருந்த தென்பதுபட நின்றமையின் எச்சவும்மை.
மேருவே கோபுரமென நிற்பதென்று கோபுரத்தின் பெருமை கூறினார்.
கடந்த என்னும் பெய ரெச்சம் கருவிப் பெயர்கொண்டது. மானும்
என்பதற்குக் கோபுரம் என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
திரிபுர
மெரித்த வரலாறாவது : - தாருகாக்கன், கமலாக்கன்,
வித்துன்மாலி என்னும் அரக்கர் மூவர் சிவபெருமானைக் குறித்துத் தவங்
கிடந்து இரும்பு வெள்ளி பொன் என்பவற்றா லாகியனவும், திரியு
மியல்பினவுமாகிய மூன்று அரண்களைப் பெற்று அவற்றுடன் சென்று பல
இடங்களையும் அழித்துத் தேவர் முதலாயினார்க்குந் துன்பம் வினைவித்து
வந்தனர். அப்பொழுது திருமால் முதலிய தேவர்கள் வேண்டிக்
கொண்டதற்கிரங்கிச் சிவபெருமான் புவித்தேரூர்ந்து மேருவை வில்லாகவும்
வாசுகியை நாணாகவும் திருமாலைக் கணையாகவும் தீக்கடவுளை அம்பின்
முனையாகவும் கொண்டு சென்று திரிபுரத்தை நோக்கி நகைபுரிய அவை
எரிந்து பட்டன என்பது. திரிபுரத்தின்மீது அம்பெய்து, அமுத்ததாகவும்
திருமுறைகளிற் பலவிடத்துக் கூறப் பெற்றுள்ளது. சிவபத்தி மிக்காராகிய
அவர்களை அழித்தற்கு உபாயமாகத் திருமாலானவர் நாரதர்
முதலானோரைக் கொண்டு அவர்கட்குப் புத்தமதத்தைப் போதிப்பித்துச்
சிவபத்தி குன்றுமாறு
|