செய்வித்தனரென்றும்
கூறப்படுகின்றது. திரிபுரம் எரியுண்டகாலையில் மூவர்
உய்ந்தனரென்றும், அவருள் இருவரை வாயில் காவலான ராகவும் ஒருவனை
முழவம் வாசிப்போனாகவும் சிவபெருமான் அமைத்துக் கொண்டனரென்றும்
மூவரையும் காவலாளராகக் கொண்டன ரென்றும் தமிழ்மறைகள்
கூறுகின்றன.
"மூவெயில்செற்றஞான் றுய்ந்தமூவரி
லிருவர்நின்றிருக் கோயிலின்வாய்தல்
காவலாளரென் றேவியபின்னை
யொருவனீகரி காடரங்காக
மானைநோக்கியோர் மாநடமகிழ
மணிமுழா முழக்க வருள்செய்த
தேவதேவநின் றிருவடியடைந்தேன்
செழும்பொழிற்றிருப் புன்கூருளானே" |
எனத்
தேவாரமும்,
"உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே யுந்தீபற" |
எனவும்
"எண்ணுடை மூவ ரிராக்கதர் ளெரிபிழைத்துக்
கண்ணுத லெந்தை கடைத்தலைமு னின்றதற்பின்" |
எனவும் திருவாசமும்
கூறுதல் காண்க. (20)
சண்ட பானுவுந்
திங்களுந் தடைபடத் திசையும்
அண்ட கோளமும் பரந்துநீண் டகன்றகோ புரங்கள்
விண்ட வாயிலால் வழங்குவ விடவரா வங்காந்
துண்ட போல்பவு முமிழ்வ போல்பவு முழலா. |
(இ
- ள்.) சண்ட பானுவும் - வெம்மை மிக்க சூரியனும், திங்களும்
- சந்திரனும், தடைபட - தாம் போக்கொழியும் வகை, திசையும் அண்ட
கோளமும் - எட்டுத் திக்குகளிலும் அண்ட முகட்டிலும், பரந்து நீண்டு
அகன்ற - அகன்று உயர்ந்து சென்ற, கோபுரங்கள் - கோவுரங்களின்,
விண்ட வாயிலால் - திறந்த வாயில் வழியால், உழலா வழங்கவ - உழன்று
சஞ்சரிப்பன, விட அரா - நஞ்சினை யுடைய இராகு கேது என்னும்
பாம்புகளால், உண்ட போல்பவும் உமிழ்வன போல்பவும் - உண்ணப்பட்டன
போல்வனவும் உமிழப் படுவன போல்வனவும் (ஆம்.) எ - று.
சண்டபானு
- விரைந்த செலவினையுடைய சூரியன் என்றுமாம்.
அகன்ற - சென்ற. பானுவுந் திங்களுமென இரண்டாதலின் பன்மை வினை
கொடுத்தார். வழங்குதலும், உண்டுமிழ்தலும் பலகால் நிகழ்தல் பற்றியுமாம்.
வழங்குவ, போல்வ என்பன தொழிற்பெயருமாம். உண்ட : அன்சாரியை
யின்றி நின்றது. உண்டற்குப் பின் நிகழ்வது பற்றி உமிழ்வன என
எதிர்காலத்தாற் கூறினார். ஆம் என்பது வருவிக்கப்பட்டது. (21)
|