மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழிச்
சிகர மாலை*சூ ழம்மதி றிரைக்கரந் துழாவி
அகழ வோங்குநிர் வையையா லல்லது வேற்றுப்
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே. |
(இ
- ள்.) மகரம் வேலை என்று - சுறாமீன்களையுடைய கடல்
என்று கருதி, யானைபோல் - யானைகளைப்போல, மழை - முகிற்
கூட்டங்கள், அருந்து - நீருண்ணப் பெறுகின்ற, அகழிச் சிகரமாலை சூழ் -
அகழியின் அலை வரிசையாற் சூழப்பட்ட, அம்மதில் - அந்த மதிலானது,
திரைக்கரம் -அலையாகிய கைகளால், துழாவி அகழ - துழாவிக் கல்லும்படி,
ஓங்குநீர் - பெருகிய நீரினையுடைய, வையையால் அல்லது - வையை
நதியாலன்றி, வேற்றுப் பகைவர் சேனையால் - வேற்று நாட்டுப் பகை
மன்னரின் படையால், பொரப்படும் பாலதோ அன்று - தாக்கப்படுந்
தன்மையதோ அன்று எ - று.
மகரம்
- சுறா; அதனை யுடைமையால் கடல் மகராலயம் எனவும்
படும். சிகரம் - அலை. சிகரம் என்பதனைச் சீகரம் என்பதன் குறுக்கமாகக்
கொண்டு நீர்த்திவலை என்னலுமாம். மாலை - வரிசை. அகழி சிகரமாலை
எனப் பாடங் கொண்டு, அகழியும் சிவரவரிசையும் என்று உரைப்பாருமுளர்.
வையையாற் பொரப்படுவதல்லது என உரைக்க. மதுரையின் மதல்
வையையாலன்றிப் பகைவராற் பொரப்படுவதன் றென்னுமிக்கருத்து.
"கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலம்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
நீர்முற்றி மதில்பொரூஒம் பகையல்லா னேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்" |
என்னும் மருதக்கலியினின்றுந்
தோன்றியதாகும். (22)
எல்லை தேர்வழித் தடைசெயு மிம்மமிற் புறஞ்சூழ்ந்
தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோ ராற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல
வல்ல வம்மதிற் பொறிசெயு மறஞ்சிறி துரைப்பாம். |
(இ
- ள்.) எல்லை - சூரியனின், தேர்வழி - தேர் செல்லும் வழி
யாகிய வானை; தடை செயும் - தடைப்படுத்தும், இம்மதில் புறம் - இம்
மதிலின் புறத்தே, மேவலர் - பகைவர், ஒல்லை சூழ்ந்து வளைந்துழி -
விரைவாக முற்றிவளைத்த காலத்து, உடன்று - சினந்து, போர் ஆற்றி -
போர் செய்து, வெல்ல - (அவர்களை) வெல்லுதற்கு, மள்ளரும் வேண்டுமோ
- வீரரும் வேண்டுமோ (வேண்டா), பொறிகளே வெல்ல வல்ல - (அம்மதிற்)
பொறிகளே வெல்ல வல்லன; அம்மதிற் பொறி செயும் - அவை செய்கின்ற,
மறம் சிறிது உரைப்பாம் - வீரச் செய்கைகளில் சிலவற்றைக் கூறுவாம்
எ - று.
(பா
- ம்.) * அகழிசிகரமாலை.
|