I


84திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     எல்லை - சூரியன்; எல் ; பகுதி, ‘எல்லை தேர்வழித் தடைசெயும்’
என்பதற்கு, உயர்வகலமாகிய எல்லையை ஆராயும் வழி அறிவைத் தடை
செயும் என்று பொருளுரைப்பாருமுளர். மள்ளர் - வீரர்; வலி யுறுத்தற்கு
வேண்டுமோ எனவும், வல்ல எனவுங் கூறினார். வல்ல : குறிப்பு வினைமுற்று
அன்சாரியையின்றி நின்றது. வளைந்துழி : வினையெச்சம். மதில் வளைத்தல்
உழிஞை யெனப்படும். (23)

        மதிற் பொறிகள்

   [எழுசீரடியாசிரியவிருத்தம்]

மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை
     வாள்கள் வீசுவன முத்தலைக்
கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி
     கால வீசுவன காலனேர்
எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள்விட
     மென்ன வீசுவன வன்னெடுங்
கொழுக்கள் வீசுவன வார்த்தரோ.

     (இ - ள்.) (பொறிகளிற் சில) மழுக்கள் வீசுவன - மழுப்படைகளை
எறிவன; நஞ்சு பூசுமுனை - நஞ்சு பூசிய முனையையுடைய, வாள்கள் -
வாட்படைகளை, வீசுவன - எறிவன; முத்தலைக் கழுக்கள் - மூன்று
முடியையுடைய சூலப்படைகளை, வீசுவன - எறிவன; குந்தம் நேமி -
கைவேல் திகிரி என்னும் படைகளை, எரிகால வீசுவன - அனலுமிழ
எறிவன; காலன் நேர் எழுக்கள் - கூற்றுவனை ஒத்த வளைதடிகளை,
வீசுவன - எறிவன; கப்பணங்கள் - இரும்பாலாகிய நெருஞசின் முள்
வடிவப் படைகளை, விடம் என்ன - நஞ்சு என்று சொல்லும்படி, வீசுவன -
எறிவன; வல் நெடும் கொழுக்கள் - வலிய நெடிய கொழுப்படைகளை,
வீசுவன - எறிவன; கவண் கயிறு - கவண் கயிற்றில், கல் கோத்து -
கல்லைக் கோத்து, ஆர்த்து - ஆர வாரித்து, வீசுவன - எறிவன எ - று.

     குந்தம் - விட்டேறு என்பர் நச்சினார்க்கினியர்; சிறுசவளம் என்பர்
சிலப்பதிகார உரையாளர்கள். கப்பணம் - இரும்பினாலே யானை
நெருஞ்சின்முள் வடிவாகச் செய்யப்பட்டது. கல்வீசுவன இடங் கணிப் பொறி
முதலியன என்பர். சில என்னும் எழுவாயை ஒவ்வொன்றுக்கும்
கூட்டிக்கொள்க. அரோ : அசை. (24)

நஞ்சு பில்குதுளை வாளெ யிற்றரவு
     நாநிமிர்த் தெறியு மலையரா
வெஞ்சி னங்கொண்முழை வாய்தி றந்துபொரு
     வாரை விக்கிட விழுங்குமால்