குஞ்ச ரங்கொடிய முசலம் வீசியெதிர்
குறுகு வார்தலைகள் சிதறுமால்
அஞ்சு வெம்பொறி விசைப்பி னுங்கடுகி
யடுபு லிப்பொறி யமுக்குமால். |
(இ
- ள்.) நஞ்சு பில்கு துளை - நஞ்சினைச் சிந்துகின்ற
துளையினை யுடைய, வாள் எயிற்று அரவு - கூரிய பற்களையுடைய பாம்புப்
பொறிகள், நாநிமிர்த்து எறியும் - நாவை நீட்டி (ப் பகைவரைக்) கொல்லும்;
வெம் சினம்கொள் - கொடிய சினங்கொண்ட, மலை அரா - மலைப்
பாம்புப் பொறிகள், முழைவாய் திறந்து - குகைபோலும் வாயைத்திறந்து,
பொருவாரை விக்கிட விழுங்கும் - போர் செய்வாரை விக்கும்படி
விழுங்கும்; குஞ்சரம் - யானைப்பொறிகள், கொடிய முசலம் வீசி - கொடிய
உலக்கைப்படையை வீசி, எதிர் குறுகுவார்கள் - எதிரே நெருங்குவார்களின்,
தலைகள் சிதறும - தலைகளைச் சிந்தும்; அடுபுலிப்பொறி - கொல்லும்
புலிப்பொறிகள், அஞ்சு வெம்பொறி - கொடிய ஐந்து பொறிகளின்,
விசைப்பினும் - வேகத்தினும், கடுகி அமுக்கும் - விரைந்து (பகைவரை)
அமுக்கும் எ - று.
ஐம்பொறி
யுவமையை நன்னெறி விலக்கும் பொறியென வெறியுங்
கராத்தது என அகழிச் சிறப்பில் வைத்துள்ளார் கம்ப
நாடர். ஆல்
எல்லாம் அசை. (25)
எள்ளி யேறுநரை யிவளி மார்பிற்
வெறிந்து குண்டகழி யிடைவிழத்
தள்ளி மீளுமுருள் கல்லி ருப்புமுளை
தந்து வீசியுடல் சிந்துமாற்
கொள்ளி வாயலகை வாய்தி றந்துகனல்
கொப்பு ளிப்பவுடல் குப்புறத்
துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன
தோள்பு டைப்பசில கூளியே. |
(இ
- ள்.) இவுளி - குதிரைப் பொறிகள், எள்ளி ஏறுநரை - இகழ்ந்து
ஏறியவர்களை, மார்பு இற எறிந்து - (அவர்கள்) மார்பு ஒடியும்படி உதைத்து,
குண்டு அகழ இடை - ஆழமாகிய அகழியின் கண், விழத்தள்ளி மீளும் -
விழும்படி வீழ்த்தித் திரும்பும் : உருள் கல் இருப்புமுளை தந்து -
உருட்சியாகிய கல் இருப்புமுளை அரிகயிறு என்னும் படைகளை, வீசி உடல்
சிந்தும் - எறிந்து (பகைவர்) உடலை அழிக்கும் (சில பொறிகள்);
கொள்ளிவாய் அலகை - கொள்ளிவாய்ப் பைசாசப் பொறிகள், வாய்திறந்து
- தம் வாய்களைத் திறந்து, கனல் கொப்புளிப்ப - தீயை உமிழ்வன; சில
கூளி - சில பேய்ப் பொறிகள், உடல் ழுப்புறத்துள்ளி ஆடுவன - உடல்
குப்புஞறும்படி குதித்து விளையாடுவன, கைகள் கொட்டுவன - கைகளைக்
கொட்டுவன, தோள்புடைப்ப - தோள்களைத் தட்டுவன எ - று.
தந்து
- நூல். நூல் - அரிகயிறு என்பர் நச்சினார்க்கினியர்.
தந்து
என்பதற்கே கொணர்ந்து எனலும், ஆம். கொப்புளிப்ப, புடைப்ப :
அன்பொறாத பலவின்பால் முற்றுக்கள். (26)
|