I


86திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



துவக்கு சங்கிலி யெறிந்தி ழுக்குமரி
     தொடர்பி டித்தகை யறுக்கவிட்
டுவக்கு மொன்னலர்க டலைக ளிதை்திருகி
     யுடனே ருக்குமர நிலைகளாற்
கவைக்கொ ழுந்தழல் கொளுத்தி வீசுமெதிர்
     கல்லு ருட்டியடு மொல்லெனக்
குவைக்க டுங்கன்மழை பெய்யு மட்டமணல்
     கொட்டு மேவலர்கள் கிட்டவே.

     (இ - ள்.) (சில பொறிகள்) மேவலர்கள் கிட்ட - பகைவர்கள்
அணுகுங்கால், துவக்கு சங்கிலி - கட்டுகின்ற சங்கிலியை, எறிந்து இழுக்கும்
- வீசி இழுக்கும்; பிடித்தகை அறுக்க - பற்றிய கையைத் தறித்தற்பொருட்டு,
அரிதொடர்விட்டு உவக்கும் - அரிசங்கிலியை விட்டு மகிழும்; மரம்
நிலைகளால் - மரநிலைகளினால், ஒன்னலர்கள் - பகைவர்களின்,
தலைகளைத் திருகி உடல் நெருக்கும் - தலைகளைப் பறித்து உடல்களை
நெறிக்கும்; கவைக்கொழுந்து - பிளவாகிய சிகையையுடைய, அழல்
கொளுத்தி வீசும் - தீயைக் கொள்ளத்தி எறியும்; கல் எதிர் உருட்டி அடும்
- கல்லை எதிரே உருட்டிக் கொல்லும்; ஒல்லென - ஒல் என்னும்
ஒலியோடு, குவை - கூட்டமாக, கடும் கல்மழை பெய்யும் - கடிய
கல்மழையைப் பொழியும்; அட்ட மணல் கொட்டும் - வறுத்த மணலைக்
கொட்டும் எ - று.

     மரநிலை - ஐயவித்துலாம் என்பர் நச்சினார்க்கினியர். ஒல்லென -
விரைய எனலுமாம். (27)

உருக்கி யீயமழை பெய்யு மாலய
     வுருக்கு வட்டுகுரு செம்பினீர்
பெருக்கி வீசும்விடு படையெ லாமெதிர்
     பிடித்து விட்டவர் தமைத்தெறச்
செருக்கி வீசுநடை கற்ற மாடமொடு
     சென்று சென்றுதுடி முரசொடும்
பெருக்கி மீளுநடை வைய மேனடவி
     யெய்யும் வாளிமழை பெய்யுமால்.

     (இ - ள்.) (சில பொறிகள்) ஈயம் உருக்கி - ஈயத்தையுருக்கி,
மழைபெய்யும் - மழைபோல (ப்பகைவர்மீது) பொழியும்; ஒருளும் அய
உருக்குவட்டு செம்பின் நீர் - உருகிய இரும்பாலாகிய உருக்குவட்டுக்
களோடு செம்பின் நீரையும், பெருக்கி வீசும் - மிகுத்து வீசும்; விடு படை
எலாம் - (பகைவர்) விடுகின்ற படைகள் அனைத்தையும், எதிர் பிடித்து -
எதிர்நின்று பிடித்து, விட்டவர்தமை - அப்பகைவரை, தெறச் செருக்கி
வீசும் - கொல்லும்படி செருக்குடன் வீசும்; நடைகற்ற மாட மொடு -
சஞ்சரிக்கின்ற மாடங்களோடு, சென்று சென்று - பல இடங்களிலும் போய்,
துடி முரசொடும் - உடுக்கை யொலியைப் பேரிகை யொலியோடும்,
பெக்கிமீளும் - மிகச்