செய்து திரும்பும்;
நடைவையம - நடைத் தேரை, மேல் நடவி - மேலே
செலுத்தி, எய்யும் வாளி மழைபெய்யும் - எய்கின்ற அம்பு மழையைப்
பொழியும் எ - று.
வையம்
- தேர். நடை வையமென்றது புரவி முதலியனவின்றிச்
செலத்துந் தேரை. நடவி - நடத்தி, நடவு : பகுதி, இ : வினையெச்ச விகுதி.
ஆல் : அசை. (28)
வெறிகொ ளைம்பொறியை வெல்லினும் பொருது
வெல்லு தற்கரிய காலனை
முறிய வெல்லினும் வெலற்கருங் கொடிய
முரணவா யமர ரரணெலாம்
அறிவி னானிறுவு கம்மி யன்செயவு
மரியவா யவனர் புரியுமிப்
பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி
புரத்து வீதிக ளுரைத்துமால். |
(இ
- ள்.) வெறிகொள் - மயக்கத்தைக்கொண்ட, ஐம்பொறியை -
ஐந்து பொறிகளையும், வெல்லினும் - வென்றாலும், பொருது - போர்
செய்து, வெல்லுதற்கு அரிய - வெல்ல முடியாத, காலனை - கூற்றுவனையும்,
முறியவெல்லினும் - புறங்கொடுக்க வென்றாலும், வெலற்கு அரும் -
வெல்லுதற்கு முடியாத, கொடிய முரணவாய் - கொடிய வலியையுடையன
வாய், அமரர் அரண் எலாம் - தேவர்களின் அரண்முதலிய எல்லா
வற்றையும், அறிவினால் நிறுவு கம்மியன் - நினைத்தலினாலேயே படைக்கும்
தேவதச்சன், செயவும் அரியவாய் - செய்யவும் இயலாதனவாய், யவனர்
புரியும் - யவனர்களால் செய்யப்பெற்ற, இப்பொறிகள் செய்யும் வினை
இன்ன - இம்மமிற் பொறிகள் செய்கின்ற தொழில்கள் இத் தன்மையன;
பொன்புரத்து - அழகிய அதுரைமா நகரத்தின், வீதிகள் அணி உரைத்தும்
- வீதிகளின் அழகைச் சொல்வாம் எ - று.
ஐம்பொறியை வெல்லுதல் அருமை யென்பது.
"ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சால" |
என்னுந் திருநேரிசை
யானுமறிக. யவனர் - கிரேக்க தேசத்தார்; இவர்கள்
பண்டை நாளிலே தமிழ் நாட்டிற் போந்து தமிழரசர்க்கு வாயிற்காத்தல்
முதலிய ஊழியம் புரிவோராயும், வேறுபல தொழில் செய்வோராயுமிருந்தனர்;
இவர்கள் மிலேச்சர் எனவும் சோனகர் எனவும் படுவர்; எகிப்து முதலிய
தேசத்தினரையும் யவனரென்னும் பெயருக்குட்படுத்தல் பொருந்தும். இவர்கள்
சிற்பம்வல்லராயிருந்த செய்தி பழைய தமிழ்நூல் பலவற்றானும்
அறியப்படுகின்றது. தமிழரசர்கள் யவனரது நாட்டினையும்
அடிப்படுத்தாண்டிருக்கின்றன ரென்பது,
"வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்" |
என்னும்
சிலப்பதிகாரத்து நடுகற் காதையா லறியப்படுகின்றது. யவனர்
புரியும் என்பதற்குத் தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி யவனரியற்றிய
என்பது கருத்தாகக் கொள்க. ஆல் : அசை.
|