I


திருநகரச் சிறப்பு89



           [கலிநிலைத்துறை]
கழையுந் தாமமுஞ் சுண்ணமு மணிநிழற் கலனுங்
குழையுந் தூபமுந் தீபமுங் கும்பமுந் தாங்கித்
தழையுங் காதலர் வரவுபார்த் தன்பகந் ததும்பி
விழையுங் கற்பினா ரொத்தன விழாவறா வீதி.

     (இ - ள்.) விழா அறா வீதி - திருவிழாக்கள் நீங்கப் பெறாத
வீதிகள், கழையும் - கரும்புகளையும், தாமமும் - பூ மாலைகளையும்,
சுண்ணமும் - வாசனைப் பொடிகளையும், மணி நிழல் கலனும் -
இரத்தினங்களாலாகிய ஒளியையுயை அணிகளையும், குழையும் -
மாந்தளிர்களையும், தூபமும் தீபமும் கும்பமுந் தாங்கி - தூபங்களையும்
தீபங்களையும் பூரண கும்பங்களையும் தாங்குதலால், (கழையும் தாமமும்
சுண்ணமும் மணி நிழல்கலனும் குழையும் - கருப்புவில் எழுதிய
தொய்யிலையும் பூமாலைகளையும் வாசனைப் பொடிகளையும் ஒளியையுடைய
இரத்தினாபரணங்களையும் குண்டலங்களையும் அணிந்து, தூபமும் தீபமும்
கும்பமும் - தூபதீப கும்பங்களாகிய மங்கலங்களை, தாங்கி - ஏந்தி)
தழையும் காதலர் - தழைகின்ற காதலையுடைய தலைவரின், வரவு பார்த்து
- வருகையை நோக்கி, அகம் அன்பு ததும்பி விழையும் - உள்ளத்தின்கண்
அன்பு நிரம்பி விரும்பி நிற்கின்ற, கற்பினார் ஒத்தன - கற்பினையுடைய
மகளிரை ஒத்தன எ - று.

     மகளிர்க்குச் சொல்லுங்கால், கழை - கரும்புவில் வடிவாக எழுதப்
பெற்ற தொய்யில்; கழை, தாமம் முதலியவற்றை அணிந்து என்றும், தூபம்
முதலியவற்றை ஏந்தி என்னும் கொள்க. நிழல் - ஒளி. நிழற் கலன் -
கண்ணாடி என்னலும் ஆம்; படிமக்கலன் என்னும் பெயரும், கண்ணாடி
அட்டமங்கலதது ளொன்றாதலும் நோக்குக. ரவு பார்த்து என்றமையாற்
பிரிந்து சென்ற காதலரின் வருகையை எதிர் நோக்கி யென்க. பிரிதல் ஓதல்
முதலியன குறித்தாம்;

"ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்
றாங்க வாறே யவ்வயிற் பிரிவே"

என்பது இறையனார்களவில். (30)

ஆல நின்றமா மணிமிடற் றண்ணலா னந்தக்
கோல நின்றசே வடிநிழல் குறுகினார் குணம்போல்
வேலை நிண்றெழு மதியெதிர் வெண்ணிலாத் தெண்ணீர்
கால நின்றன சந்திர காந்தமா ளிகையே.

     (இ - ள்.) ஆலம் நின்ற - நஞ்சு நிலைபெற்ற, மாமணி மிடற்று
அண்ணல் - பெருமை பொருந்திய நீலமணிபோலும் திருமிடற்றினை யுடைய
இறைவனின், ஆனந்தக்கோலம் நின்ற - இன்பவடிவம் நிலைபெற்ற,
சேவடிநிழல் - சிவந்த திருவடி நீழலில், குறுகினார்குணம்போல் - (பிறவி
வெப்புத்தணிய) அடைந்தவர்கள் (ஆனந்தக் கண்ணீர்சொரிய நிற்கும்)
தன்மைபோல், சந்திரகாந்த மாளிகை - சந்திரகாந்தக் கற்களாலாகிய
மாளிகைகள், வேலைநின்று எழு - கடலினின்றும் எழுகின்ற, மதி எதிர் -