I


கடவுள் வாழ்த்து9



     (இ - ள்.) அண்டங்கள் எல்லாம் - எல்லா அண்டங்களும்,
அணுவாக - அணுவாகத் தோன்ற, பெரிதாய் - பெரிய பொருளாகி,
அணுக்கள் எல்லாம் - எல்லா அணுக்களும், அண்டங்களாக -
அண்டங்களாகத் தோன்ற, சிறிதாயினானும் - நுண்பொருளாயினானும்,
அண்டங்கள் உள்ளும் புறம்பும் - அண்டங்களின் அகத்தும் புறத்தும், கரி
ஆயினானும் - சான்றாயினானுமாகிய இறைவனை, அண்டங்கள் ஈன்றாள் -
அவ்வண்டங்களைப் பெற்ற உமையம்மையாருக்கு, துணை என்பர் -
துணையாக நிற்பவன் என்று சொல்லுவர், அறிந்த நல்லோர் - மெய்
உணர்ந்த பெரியோர் எ - று.

     நிரனிறை கொண்டு கூட்டி உரைக்கப்பட்டது. இறைவன் அண்டங்கள்
எல்லாம் அணுவாகப் பெரிதாயிருக்குந் தன்மை,

"அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன்"

எனத் திருவாசகத்துள் ஓதப்பட்டது.

திருவிசைப்பாவிலும்,

"அண்டமோ ரணுவாம் பெருமைகொண் டணுவோர்
     அண்டமாஞ் சிறுமைகொண் டடியேன்,
உண்டவூ ணுனக்காம் வகையென துள்ளம்
     உள்கலந் தெழுபரஞ் சோதி"

எனப் பெரிதும் சிறிதுமாந்தன்மை கூறப்பெற்றமை காண்க. ஆயினானு
மென்புழி, ஆயினானுக்கும் எனக் குவ்வுருபு விரித்துப் பொருளுரைத்தலுமாம்.
(6)

       சொக்கநாதர்

       [கலி விருத்தம்]

பூவி னாயகன் பூமக ணாயகன்
காவி னாயக னாதிக் கடவுளர்க்
காவி நாயக னங்கயற் கண்ணிமா
தேவி நாயகன் சேவடி யேத்துவாம்.

     (இ - ள்.) பூ இல் நாயகன் - தாமரை மலரை இருக்கையாக வுடைய
அயனும், பூமகள் நாயகன் - செந்தாமரை மலரில் இருக்கும் திருமகளின்
தலைவனாகிய அரியும், காவின் நாயகன் - கற்பகத் தருவிற்குத்
தலைவனாகிய இந்திரனும், ஆதி - முதலான, கடவுளர்க்கு - தேவர்கட்கு,
ஆவிநாயகன் - பிராணநாதனும், அம்கயல் கண்ணி - அழகிய கயல்
போன்ற கண்களையுடையவராகிய, மாதேவி நாயகன் - பெருமை
பொருந்திய