சந்திரன்முன்னர்,
வெள் நிலாத் தெள் நீர் கால நின்றன - வெள்ளிய
ஒளியினையுடைய தெளிந்த நீர் ஒழுகும்படி நின்றன எ - று.
குறுகினார்
குணம் என்றது ஆனந்தக் கண்ணீர் பொழியு மியல்பினை;
குணம் தெளிந்த நீர் என்னலுமாம். சந்திரகாந்தம் - சந்திரனைக் கண்டு நீர்
சொரியும் ஒருவகைக் கல். (31)
குன்ற நேர்பளிக்
குபரிகை நிரைதொறுங் குழுமி
நின்ற பல்சரா சரமுமந் நீழல்வாய் வெள்ளி
மன்ற கம்பொலிந் தாடிய மலரடி நிழல்புக்
கொன்றி யொன்றறக் கலந்தபல் லுயிர்நிலை யனைய. |
(இ
- ள்.) குன்றம் நேர் - மலையை ஒத்த, பளிக்கு உபரிகை நிரை
தொறும் - பளிங்குக் கற்களாலாகிய மேல்வீடுகளின் வரிசைதோறும்,
குழுமிநின்ற - கூடிநின்ற, பல் சர அசரமும் - பல இயங்கியற் பொருள்களும்
நிலையியற் பொருள்களும், அந்நீழல் வாய் - அம்மேல் வீடுகளின்
நீழலின்கண், ஒன்றி - கலத்தலால் - (அவை), வெள்ளிமன்று அகம் -
நிழல் - மலர்போலும்திருவடி நீழலில், புக்குஒன்று அற (ஒன்றி) போய்
ஒன்றுமாகாமல் வேறுமாகாமல் சேர்ந்து, கலந்த நிலை - கலந்த
தன்மையையுடைய, பல் உயிர் அனைய - பல உயிர்களை ஒத்தன எ - று.
ஒன்றி
யென்பது முன்னுங் கூட்டி, ஒன்றலால் எனத் திரிக்கப் பட்டது.
கலந்த நிலையையுடைய பல்லுயிர் என்க. நிழலில் ஒன்றி விளங்குந்
தன்மைகள் பல்லுயிர் கலந்த தன்மைகளைப் போல்வன என்றுரைத்தலுமாம்.
ஒன்றற என்றது அபேதமின்றி யென்றபடி. பேதமின்றிக் கலத்தலென்பது
இரண்டறக் கலத்தல் எனப்படும். ஆன்மாக்கள் இறைவனுடன் கலக்கும்
கலப்பானது பேதம், அபேதம் பேதாபேதம் என்னும் மூன்றினும்
வேறென்றும், அதுவே அத்துவிதம் எனக் கூறப்படுமென்றும் சைவ
சித்தாந்தம் இயம்புகின்றது. இதனை,
"புறச்சமயத் தவர்க்கிருளா யகச்சமயத் தொளியாய்ப்
புகலளவைக் களவாகிப் பொற்பணிபோ லபேதப்
பிறப்பிலதா யிருள்வெளிபோற் பேதமுஞ்சொற் பொருள்போற்
பேதாபே தமுமின்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் வினைவதா யுடலுயிர்கண் ணருக்கன்
அறிவொளிபோற் பிறிவருமத் துவிதமாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாஞ் சைவ
சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்" |
என்னும் சிவப்பிரகாசத்
திருவிருத்தத்தா லறிக. (32)
கறித்த ருந்துபுற் குவைகழீ இக் காற்றொடர் பரியத்
தெறித்த கன்றயன் மரகதச் சித்திரத் தெற்றி
எறித்த பைங்கதிர் கொழுந்தையு மெட்டிநா வளைத்துப்
பறித்து மென்றுவா யசைப்பன பசலையான் கன்று.
|
|