(இ
- ள்.) ஆன் பசலை கன்று - பசுவின் இளங்கன்றுகள், கறித்து
அருந்து - கடித்துத் தின்னுகின்ற, புல் குவை கழீ இ - புற்குவியல்களை
நீக்கி, கால் தொடர் - காலிற் கட்டிய கயிறானது, பரியத் தெறித்து அகன்று
- அறும்படியாகத் துள்ளி (அங்கு நின்றும்) நீங்கி, அயல் -
பக்கங்களிலுள்ள, மரகதம் - மரகதத்தாலமைந்த, சித்திரத்தெற்றி -
சித்திரங்களமைந்த திண்ணைகள், எறித்த பைங்கதிர்க் கொழுந்தை -
வீசுகின்ற பசிய ஒளிக்கொழுந்தை, நா வளைத்து - நாவை வளைத்து நீட்டி,
எட்டிப்பறித்து - எட்டிப்பிடுங்கி, மென்றுவாய் அசைப்பன - தின்று வாயால்
அசை போடுவன எ - று.
கறித்து
- கடித்து. கழீஇ - கழித்து. பறித்தும் என்று எப் பிரித்து,
பறிப்பேமென்று எனப் பொருள் கூறலுமாம். கொழுந்தையும் என்பதில்
உம் : அசை நிலை. (33)
சிறுகு கண்ணவாய்க் காற்றெறி செவியவாய்ப் பாசம்
இறுகு காலவாய்க் கோட்டுமா னினம்வழங் காறும்
குறுகு நுண்மருங் கிறுத்தெழு கோட்டுமா னினம்போம்
மறுகும் வண்டுசூழ்ந் திறைகொள மான்மத நாறும். |
(இ
- ள்.) சிறுகு கண்ணவாய் - சிறிய கண்களையுடையனவாய்,
காற்று எறி செவியவாய், காற்றை வீசும் செவிகளையுடையனவாய், பாசம்
இறுகு காலவாய் - சங்கிலி இறுகப் பிணித்த கால்களையுடையனவாய்,
கோட்டுமான் இனம் - கொம்புகளையுடையனவாகிய யானைக் கூட்டங்கள்,
வழங்கு ஆறும் - செல்லுகின்ற நெறிகளிலும், வண்டு சூழ்ந்து இறைகொள -
வண்டுகள் மொய்த்துத் தங்க, மால் மதம் நாறும் - மிகுந்த மதநீர்
மணக்கும்; குறுகுநுண் மருங்கு - மிக நுண்ணிய இடையானது. இறுத்து -
முறிய, எழு கோட்டு - பூரித் தெழுந்த தலைச்சிகரம்போன்ற
கொங்கைகளையுடைய, மான் இனம் - மான் போலும் மகயிர் கூட்டம்,
போம் மறுகும் - போகின்ற வீதிகளிலும், வண்டு சூழ்ந்து இறைகொள -
வண்டுகள் மொய்த்துத் தங்க, மான் மதம் நாறும் - கத்தூரி கமழும்
எ - று.
கோட்டு
மானினம் என்னுந் தொடர்கள் முன்னுள்ள அடைகளால்
யானைக் கூட்டத்தையும், மகளிரினத்தையும் குறிப்பன வாயின. மகளிரைக்
குறிக்குமிடத்துக் கோடு, மான் என்பன அவைபோலும் பொருளுக்காயின.
இறைகொள - தங்க : ஒரு சொல். மால் - பெரிய. மான்மத நாறும் என்பது
முன்னுங் கூட்டித் தனித்தனி முடிக்கப்பட்டது. கண்ணவாய் என்பது முதலிய
குறிப்புவினை யெச்சங்கள் கொம்புகளை யுடையனவாகிய என விரிக்கப்பட்ட
பெயரெச்சவினை கொண்டுமுடியும். இறுத்து : செயவெனெச்சத் திரிபு.மான்மத
நாறும் என்னும் வினை சிலேடையாய் ஆறு, மறுகு என்னும் இரண்டிற்கும்
பொருந்துதலின் பல வினைச்சிலேடையாகும். மேல் இங்ஙனம் வருவனவும்
இது. (34)
மாட மாலையு மேடையு மாளிகை நிரையும்
ஆட ரங்கமு மன்றிவே ளன்னவர் முடியும்
ஏட விழ்ந்ததா ரகலமு மிணைத்தடந் தோளுஞ்
சூடு மாதரார் சீறடிப் பஞ்சுதோய் சுவடு. |
|