I


திருநகரச் சிறப்பு93



என்னும் திருக்குறளும், "தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய் -
நோன்மையாற் றன்னையொன்றுங் கலத்தலின்மையின் தூய்தாய்த்தான்
எல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகார மின்றி
எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல்பற்றி, அதனைச் ‘செம்பொருள்’ என்றார்"
என்னும் பரிமேலழக ருரையும் நோக்குக. செங்கை - செவ்விய கையுமாம்.
தானமாவது தக்கார்க்கு வேண்டும் பொருளை நீருடனளிப்பது. கோட்டு
யானை, பரும யானை எனத் தனித்தனி முடிக்க. மாறு - பகைமை;
பகைமையுடையாரை உணர்த்திற்று. (36)

பரிய மாமணி பத்தியிற் பதித்திருட் படலம்
பொரிய வில்லிடக் குயிற்றிய பொன்னர மியமுந்
தெரிய மாமுர சொலிகெழு செம்பொனா டரங்கும்
அரிய மின்பயோ தரஞ்சுமந் தாடுவ கொடிகள்.

     (இ - ள்.) பரிய மாமணி - பருத்த பெருமை பொருந்திய மணிகளை,
பத்தியில் - வரிசையாக, பதித்து - பதித்து. இருள் படலம் பொரிய - இருட்
கூட்டம் சிதறும்படி, வில் இட - ஒளிவிடுமாறு, குயிற்றிய - செய்த, பொன்
அரமியமும் - பொன்னாலாகிய நிலா முற்றங்களிலும், கொடிகள் -
கொடிகள், அரிய மின் பயோதரம் - மின்னலை யுடைய பசியமேகங்களை,
சுமந்து ஆடுவ - தாங்கி அசைவன; தெரிய மாமுரசு ஒலிகெழு -
விளங்கும்படி பெரிய முரசின் ஒலி பொருந்திய, செம்பொன் ஆடு அரங்கும்
- சிவந்த பொன்னாலாகிய நடனசாலைகளிலும், கொடிகள் - கொடி போன்ற
பெண்கள், அரிய - நுண்ணிய, மின் - மின்னல்போலும் இடையினையும்,
பயோதரம் - கொங்கைகளையும், சுமந்து ஆடுவ - தாங்கி நடிப்பார்கள்
எ - று.

     பெரிய வில்லிடப் பதித்துக் குயிற்றிய எனக்கூட்டி முடித்தலுமாம்;
சிந்தாமணியுரையில், நச்சினார்க்கினியர், "உதைய கிரியிற் சிந்தூர
அருவி வீழ்ந்த சிந்தூராகரத்திற் பிறந்து பதினாறு சதுர் யுகஞ் சிவப்பேறின
முழுமாணிக்கம் இருளைக் கெடுத்தலின் ‘இருள் பருகுமருமணி’ என்றார்"
எனக் கூறியிருப்பது நோக்கற்பாலது.

     அரமியம் - நிலாமுற்றம். தெரிய - விளங்க. அரிய : அரி
என்பதனடியாக வந்த குறிப்புப் பெயரெச்சம். அரி - பசுமை, நுண்மை.
பயோதரம் என்பது நீரைத் தரிப்பது என்னுங் காரணத்தால் மேகத்திற்கும்,
பாலைத் தரிப்பது என்னுங் காரணத்தால் கொங்கைக்கும் பெயர். மின்,
கொடிகள் என்பன முறையே இடைக்கும் மகளிர்க்கும் ஆகுபெயர்.
இப்பொருளில் ஆடுவர் என உயர்திணை முடிபாக்குக. (37)

வலம்ப டும்புயத் ாடவர் மார்பமேற் புலவிக்
கலம்ப டர்ந்தபூண் முலையினார் காலெடுத் தோச்சச்
சிலம்ப லம்பிசை மழுங்கமுன் னெழுமவர் தேந்தார்ப்
புலம்பு வண்டுநொந் தரற்றிய பொங்குபே ரொலியே.

     (இ - ள்.) வலம் படும் புயத்து - வெற்றி பொருந்திய
தோள்களையுடைய, ஆடவர் மார்ப மேல் - தத்தங் கணவர்களின்
மார்பின்கண், புலவிக் கலம் படர்ந்த - ஊடலாகிய அணி பரந்த,
பூண்முலையினார் - அணிகலத்தையுடைய கொங்கையையுடைய மகளிர்,