கால் எடுத்து ஒச்ச
- காலை எடுத்து உதைக்க, சிலம்பு அலம்பு இசை
மழுங்க - (அவர்) சிலம்பு ஒலிக்கின்ற ஒலி மழுங்கும்படி, அவர் -
அவ்வாடவர்களின், தேம்தார் - தேனையுடைய மாலையினின்றும், புலம்பு
வண்டு - இசை பாடும் வண்டுகள், நொந்து அரற்றிய - வருந்தி ஒலித்த,
பொங்கு பேர் ஒலி - மிகுந்த பெரிய ஒலியானது, முன் எழும் - முற்பட்டுத்
தோன்றும் எ - று.
புலவியானது
அவரைப் பொதிந்ததென்பார் படர்ந்த என்றார்.
படர்ந்த மகளிரென்ப. (காமக் கடலிற்) புலவியாகிய மரக்கலத்திற் சென்ற
என்னலுமாம். பூண் கலம் படர்ந்த முலையினார் புலவியால் ஒச்ச என
முடித்தலுமாம். காலெடுத்தோச்சுமியல்பினை மாடமாலையும் என்னுஞ்
செய்யுளுரையிற் கூறியது கொண்டுமறிக. நன்கு ஓச்ச வென்பார்
எடுத்தோச்ச என்றார். தேன்; தேம் எனத் திரிந்தது. (38)
தைய லார்மதி முகங்களுந் தடங்களுங் குழைய
மைய ளாவிய விழிகளு மாடமுங் கொடிய
கையு நாண்மலர்ப் பொதும்பருங் கறங்கிசை வண்ட
நெய்ய வோதியும் வீதியு நீளற னெறிய.
|
(இ
- ள்.) தையலார் மதிமுகங்களும் - மகளிரின் மதிபோன்ற
முகங்களும், குழைய - குண்டலங்களையுடையன; தடங்களும் -
தடாகங்களும், குழைய - தளிர்களையுடையன; மை அளாவிய விழகளும் -
மை தீட்டப்பெற்ற (அவர்) கண்களும், கொடிய - கொடுமையை யுடையன;
(மை அளாவிய - மேக மண்டலத்தை அளாவிய) மாடமும் - மாடங்களும்.
கொடிய - கொடிகளையுடையன; கையும் - (அவர்) கைகளும், கறங்கு
இசைவண்ட - ஒலிக்கின்ற ஒலியினையுடைய வளையல்களை யுடையன;
நாள் மலர்ப் பொதும்பரும் - அன்ற லர்ந்த மலர்களையுடைய
சோலைகளும், கறங்கு இசைவண்ட - ஒலிக்கின்ற இசையினையுடைய
வண்டுகளையுடையன; நெய்ய ஓதியும் - நெய்யினையுடைய (அவர்)
கூந்தல்களும், நீள் அறல் நெறிய - கரு மணல்போலும் நீண்ட
நெறிப்பினையுடையன; வீதியும் நீள் அறன் நெறிய - வீதிகளம் மிக்க
அற நெறிகளையுடையன எ - று.
மையனாவிய
என்னும் அடை சிலேடையாய் மாடத்திற்கம்
பொருந்திற்று. நெய் - புழுகுமாம். நெய்ய : குறிப்பு வினைப்பெயரெச்சம்.
குழைய என்பது முதலியன சாரியை யின்றி வந்த பலவின் பாற் குறிப்பு
வினை முற்றுக்கள். (39)
மலருந் திங்கடோய் மாடமுஞ் செய்வன மணங்கள்
அலருந் தண்டுறை யுங்குடைந் தாடுவ தும்பி
சுலவுஞ் சோலையு மாதருந் தூற்றுவ வலர்கள்
குலவும் பொய்கையு மனைகளுங் குறைபடா வன்னம். |
(இ
- ள்.) மலரும் - பூக்களும், செய்வன மணங்கள் - மணங்களை
வீசுவன; திங்கள்தோய் மாடமும் - சந்திரமண்டலத்தை யளாவிய
மாளிகைகளும், மணங்கள் செய்வன - கல்யாணங்கள் செய்யப்படுவன;
|