I


திருநகரச் சிறப்பு95



அலரும் - மலர்களிலும், தும்பி - வண்டுகள், குடைந்து ஆடுவ - கிண்டி
ஆடுவன; தண் துறையும் - குளிர்ந்த நீர்த்துறைகளிலும், தும்பி -
யானைகள், குடைந்து ஆடுவ - மூழ்கி விளையாடுவன; சுலவும் சோலையும்
- சூழ்ந்திருக்கின்ற சோலைகளும், அலர்கள் தூற்றவ - மலர்களைச்
சொரிவன; மாதரும் - மகளிராலும், அலர்கள் தூற்றுவ - பழிமொழிகள்
தூற்றப்படுவன; குலவும் - விளங்குகின்ற, பொய்கையும் - தடாகங்களிலும்,
அன்னம் குறைபடா - அன்னப்பறவைகள் குறையா (நிறைந்துள்ளன);
மனைகளும் - இல்லங்களிலும், அன்னம் குறைபடா - அடி சில்கள்
குறையா (நிறைந்துள்ளன) எ - று.

     மலரும், சோலையும் என்பன எழுவாய் வேற்றுமை. மாதரும்
என்பதில் மூன்றனுருபும், மாடமும் என்பது முதலியவற்றில் ஏழனுருபும்
விரிக்க. சோலையும் மாதரும் என்பதற்குத் திணை விரவிச் சிறப்பால்
அஃறிணை வினைகொண்டு முடிந்தன என்னலுமாம். மாதர்அலர் தூற்றுதல்
தலைவன் தலைவியரின் களவொழுக்கம் வெளிப்பட்ட ஞான்றென்க. (40)

ஊடி னாரெறி கலன்களு மம்மனை யுடன்பந்
தாடி னார்பரி யாரமு மடியினாற் சிற்றில்
சாடி னாரொடு வெகுண்டுகண் டதும்புமுத் துறைப்ப*
வாடி னார்பரி நித்தில மாலையுங் குப்பை.

     (இ - ள்.) ஊடினார் - (தலைவரோடு) புலந்த மகளிர், எறி
கலன்களும் - வெறுத்து எறிந்த அணிகளும், அம்மனைஉடன் பந்து
ஆடினார் - அம்மனையொடு பந்து விளையாடு மகளிர், பரி ஆரமும் -
(சுமக்க லாற்றாது) நீத்த அணிகளும், அடியினால் சிற்றில் சாடினாரொடு -
காலினால் (தாமிழைத்த) சிறு வீட்டை அழித்த இளைஞரோடு, வெகுண்டு -
கோபித்து, கண் ததும்பும் - கண்களினின்றும் ததும்புகின்ற, முத்து உறைப்ப
- முத்துப்போலும் நீர்த்துளிகள் துளிக்க, வாடினார் - வருந்திய சிறுமிகள்,
பரி - (அறுத்து) எறிந்த, நித்திலமாலையும் - முத்து மாலைகளும், குப்பை -
(அவ் வீதியில்) குப்பைகளாம் எ - று.

     ஊடினார் வெறுத்தும், ஆடினார் சுமக்கலாற்றாதும், வாடினார்
சினந்தும் எறிவ ரென்க. சிற்றில் சாடுதல் - சிறார்கண் இயற்கையினிகழும்
குறும்புச்செயல். இதனை ஆண்பாற் பிள்ளைக்கவியில் ஒரு பருவமாக
வைத்துப் பாடுதலுங் காண்க. பரிதல் - அறுதல்; பரி என்பது ஈண்டுப்
பிறவினைப் பொருளில் வந்தது. முத்து என்பது முத்துப்போலும்நீர்த்
துளிக்காயிற்று. உறைத்தல் - துளித்தல். இறைப்ப என்னும் பாடத்திற்குக்
கண்கள் சொரிய வென்க. ஈற்றில் ஆக்கம் வருவிக்க. (41)

ஐய வென்னுரை வரம்பின வாகுமோ+வடியர்
உய்ய மாமணி வரிவளை விறகுவிற் றுழன்றோன்
பொய்யில் வேதமுஞ் சுமந்திடப் பொறாதகன் றரற்றுஞ்
செய்ய தாண்மலர் சுமந்திடத் தவஞ்செய்த தெருக்கள்.


     (பா - ம்.) * முத்திறைப்ப. +வரம்பினதாகுமோ.