I


96திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) அடியர் உய்ய - அடியார்கள் உய்தற்பொருட்டு, மாமணி
- பெருமை பொருந்திய மாணிக்கங்களையும், வரிவளை - வரிகளையுடைய
வளையல்களையும், விறகு - விறகையும், விற்று உழன் றோன் - விற்றுத்
திரிந்த இறைவனுடைய, பொய்யில்வேதமும் - பொய் யில்லாத வேதங்களும்,
சுமந்திடப் பொறாது - தீண்டமாட்டாமல், அகன்று - சேய்மையினின்று,
அரற்றும் - முறையிடப்பெற்ற, செய்ய தாள் மலர் - சிவந்த திருவடி
மலர்களை, சுமந்திட - சுமப்பதற்கு, தவம் செய்த தெருக்கள் - தவம் புரிந்த
வீதிகளின் பெருமைகள், என் ஐய உரைவரம்பின ஆகுமோ - எளியேனது
நொய்மையான சொல்லின் அளவின ஆகுமோ? (ஆகா) எ - று.

     ஐய : ஐம்மை யென்பத னடியாக வந்த குறிப்புப்பெயரெச்சம்; ஐம்மை
- நெhய்மை; ‘ஐவியப்பாகும்’ என்பதனால் ஐ யென்னும் உரிச்சொல் திரிந்து
வந்ததெனக் கொண்டு, (நான் கூறப்புகுந்தது) வியப்பே என்னலுமாம்.
எண்ணும்மைகள் தொக்கன. உழன்றோன் தாண்மலர் எனக் கூட்டுக.
வேதமும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு. சுமந்திடத் தவஞ்செய்த
என்பதைத் தவஞ்செய்து சுமந்த எனப் பிரித்துக் கூட்டலுமாம். தெருக்கள் -
தெருக்களின் பெருமைகள். மணி வளை விறகு விற்றமையை இப்புராணத்து
இவ்வப்படலங்களா னறிக. (42)

          [அறுசீரடியாசிரிய விருத்தம்]
தோரண நிரைமென் காஞ்சி சூழ்நிலை நெடுந்தே ரல்குற்
பூரண கும்பக் கொங்கைப் பொருவின்மங் கலமா மங்கை
தாரணிந் தாரந் தூக்கிச் சந்தகி றிமிர்ந்து பாலிச்
சீரணி முளைவெண் மூரல் செய்துவீற் றிருக்கு மன்னோ.

     (இ - ள்.) தோரண நிரை - தோரண வரிசையாகிய, மென்காஞ்சி
சூழ் - மிருதுவான எண்கோவை சூழ்ந்த, நிலை நெடுதேர், அல்குல் -
பெரிய நிலைத்தேராகிய அல்குலையும், பூரண கும்பம் - நிறை
குடங்களாகிய, கொங்கை - கொங்கைகளையுமுடைய, பொரு இல் -
ஒப்பற்ற, மங்கலமாம் மங்கை - மங்கலமாகிய மங்கையானவள், தார்
அணிந்து - மலர்மாலைகளை அணிந்து, ஆரம் தூக்கி - முத்துமாலைகளைத்
தொங்க விட்டு, சந்து அகில் திமிர்ந்து - சந்தனக் குழம்பையும் அகிற்
குழம்பையும் பூசி, பாலி - பாலிகைகளிலுள்ள, சீர் அணி - சிறப்பு வாய்ந்த,
வெண்முளை, மூரல் செய்மு - வெள்ளிய முளைகளாகிய புன்னகை காட்டி,
வீற்றிருக்கும் - வீற்றிருப்பாள் எ - று.

     மென்மை - தொழிலின் நயம். காஞ்சி - இடையிலணியும் அணி
விசேடம்; எண்கோவை யுடையது. சீர் அணி - சிறப்பும் அழகு முடைய
என்றும், அழகு மிக்க என்றும் கூறலுமாம். தோரணம் முதலியவற்றைக்
காஞ்சி முதலியவாக உருவகித்து, அவற்றை மங்கல மங்கைக்கு
உரியவாக்கினார்; அவை மங்கலப்பொருள்களாதலின். அந்நகரத்தில்
மங்கலமெல்லாஞ் சிறந்து திகழ்கின்றன என்றபடி. நகரவீதிகளின் சிறப்பைப்
பொதுவகையால் உரைத்துவந்து, இது முதல் மூன்று செய்யுட்களால் நகரின்
சிறப்பைப் பொதுவகையாற் கூறுகின்றார். மன், ஓ : அசை. (43)