I


திருநகரச் சிறப்பு97



திங்களைச் சுண்ணஞ்செய்து சேறுசெய் தூட்டி யன்ன
பொங்குவெண் மாடப் பந்தி புண்ணியம் பூசுந் தொண்டர்
தங்கண்மெய் வேடந் தன்னைத் தரித்தன சாலக் கண்கொண்
டங்கணன் விழவு காண்பா னடைந்தன மிடைந்த வன்றே.

     (இ - ள்.) திங்களை - மதியை, சுண்ணம் செய்து - நீறாக்கி, சேறு
செய்து - சேறாகக் குழைத்து, ஊட்டி அன்ன - பூசினாலொத்த, பொங்கு -
விளங்குகின்ற, வெள் மாடப்பந்தி - வெள்ளிய மாடவரிசைகள், புண்ணியம்
பூசும் - திரு நீற்றை யணிந்த, தொண்டர் தங்கள் - அடியார்களின்,
மெய்வேடம் தன்னை - உண்மை வேடத்தினை, தரித்தன -
தாங்கினவைகளாய், காச - மிக, கண்கொண்டு - கண்களால், அங்கணன் -
அழகிய கண்ணையுடைய இறைவனது, விழவு காண்பான் - திருவிழாவைக்
காண்பதற்கு, அடைந்தென - அடைந்தாற் போல, மிடைந்த -
நெருங்கியுள்ளன எ - று.

     புண்ணியம் - திருநீறு; ‘புண்ணிய மாவது நீறு’ எனத் தமிழ்மறை
கூறுவது காண்க. மெய்வேட மென்பது அவ்வேடமே மெய்ப்பொருளாகலின்.
மாடங்கட்குச் சாலக்கண் என்றதனைச் சாளரக்கண் என்று கொள்க. சாலம்
- சாளரம். கண் - துவாரம்; கண்போறலின் கண் எனப்படும். பலகணி
யென்னும் பெயரும் அதுபற்றி வந்தது. கொண்டு : மூன்றாம் வேற்றுமைச்
சொல். ஊட்டியன்ன, அடைந்தென என்பன வினையெச்சத் திரிபுகள்.
காண்பான் : வினையெச்சம். அன்று, ஏ : அசை. (44)

தேரொலி கலினப் பாய்மான் சிரிப்பொலி புரவி பூண்ட
தாரொலி கருவி யைந்துந் தழங்கொலி முழங்கு கைம்மான்
பேரொலி யெல்லா மொன்றிப் பொருகொலி யன்றி யென்றுங்
காரொலி செவிம டாது கடிமணி மாடக் கூடல்.

     (இ - ள்.) கடி மணி மாடம் - விளக்கமாகிய மணிகள் பதிக்கப்
பெற்ற மாடங்களையுடைய, கூடல் - கூடற்பதியில், என்றும் - எஞ்ஞான்றும்,
தேர் ஒலி - தேர்கள் ஓடுவதனாலுண்டாய வொலியும், கலினம் -
கடிவாளத்தையுடைய, பாய் மான் - பாய்கின்ற குதிரைகளின், சிரிப்பு ஒலி -
கனைப்பொலியும். புரவி பூண்ட - அவைகள் அணிந்த, தார் ஒலி -
கிண்கிணி மாலையின் ஒலியும், கருவி ஐந்தும் - (தோற்கருவி முதலிய)
ஐவகை இயங்களும், தழங்கு ஒலி - ஒலிக்கின்ற ஒலியும்; முழங்கு கைம்மான்
- பிளிறுகின்ற யானைகளின், பேர் ஒலி - பெரிய ஒலியுமாகிய, எல்லாம்
ஒன்றி - இவை எல்லாம் கலந்து, பெருகு ஒலி அன்றி - பெருகிய ஒலி
கேட்கப்படுவதன்றி, கார் ஒலி - மேகத்தின் இடியொலியானது, செவி மடாது
- செவியிற் கேட்கப்படாது எ - று.

     கடிலனப் பாய்மான் என முன் வந்தமையான் புரவி என்பதனைச்
சுட்டாகக் கொள்க. கருவி ஐந்தாவன : தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்
கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன. ஆகியவென ஒரு சொல்
வருவிக்க. செவிமடுக்கப்படா தென்க. கடி - விளக்கம். நான் மாடக்கூடல்
என்பதுமுதல் குறைந்து வந்த தென்னலுமாம். (45)