I


98திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பரத்தையர் வீதி
இழிபவ ருயர்ந்தோர் மூத்தோ
     ரிளையவர் கழயா நோயாற்
கழிபவர் யாவ ரேனுங்
     கண்வலைப் பட்டு நெஞ்சம்
அழிபவர் பொருள்கொண் டெள்ளுக்
     கெண்ணெய்போ லளந்து காட்டிப்
பழிபடு போகம் விற்பார்
     ஆவணப் பண்பு சொல்வாம்.

     (இ - ள்.) இழிபவர் - இழிகுலத்தோர், உயர்ந்தோர் - உயர்
குலத்தோர், மூத்தோர் - முதியோர், இளையவர் - இளைஞர், கழயா
நோயால் கழிபவர் - நீங்காத நோயினால் மெலிகின்றவர், யாவரேனும் -
(ஆகிய) யாவராயினும், கண் வலைப்பட்டு - தம் கண்களாகிய
வலைகளி லகப்பட்டு, நெஞ்சம் அழிபவர் பொருள்கொண்டு - மனம் வருந்து
கின்றவர்களின் பொருளைக் கைக்கொண்டு, எள்ளுக்கு எண்ணெய் போல் -
எள்ளுக்கு எண்ணெய் அளந்து கொடுப்பது போல், அளந்து காட்டி -
அப்பொருளுக்குத்தக அளந்து காட்டி, பழிபடு - பெரியோர் களால்
பழிக்கப்படுகின்ற, போகம் விற்பார் - கலவியின்பத்தை விற்கின்ற
புறப்பெண்டிரின், ஆவணப்பண்பு - வீதியின் தன்மையை, சொல்வாம் -
பகருவாம் எ - று.

     எள்ளுக்கு என்றமையின் நெய்யெனவே அமையுமெனினும்
விளக்குதற் பொருட்டு எண்ணெய் என்றார்; வழக்கு நோக்கி யெனினுமாம்.
மிகைகுறையின்றி யென்பார் அளந்து காட்டியென்றார். விற்பாரென்ற
தற்கேற் ஆவணம் என்றார். (46)

மெய்படு மன்பி னார்போல் விரும்பினார்க் கருத்துந் தங்கள்
பொய்படு மின்பம் யார்க்கும் புலப்படத் தேற்று வார்போல்
மைபடு கண்ணார் காமன் மறைப்பொருள் விளங்கத் தீட்டிக்
கைபடச் சுவராய்த் தோன்றச் சித்திரங் காணச் செய்வார்.

     (இ - ள்.) மைபடு கண்ணார் - மையளாவிய கண்களையுடைய விலை
மகளிர், மெய்படும் அன்பினார் போல் - உண்மையான அன்புடையாரைப்
போல, விரும்பினார்க்கு - விரும்பிய ஆடவருக்கு, அருத்தும் - ஊட்டுகின்ற,
தங்கள் பொய்படும் இன்பம் - தம்முடைய பொய்யாகிய இன்பக்
கலவிகளை, யார்க்கும் - அனைவருக்கும், புலப்பட - விளங்க, தேற்றுவார்
போல் - தெளிவிப்பார் போல், காமன் மறைப் பொருள் - காமநூலுட் கூறும்
கலவிக்கரணங்களை, விளங்கத் தீட்டி - விளங்கும்படி எழுதிவைத்தும்,
கைபட - கைபடுங்கால், சுவராய்த்தோன்றவும் - சுவராகத் தோன்றவும்,
சித்திரம் காணச் செய்வார் - சித்திரங்களைப் புலப்படுத்துவார்கள் எ - று.

     மெய்படு மன்பினார் போல் என்றமையின், அவர் பொய்யன்புடையார் என்பதாயிற்று. இன்பமென்றது, கலவிக்கரணங்களை தாம் அவை