வல்லராதலைக் காட்டவும்,
அவை அறியாத ஆடவர் அறிந்துகொள்ளச்
செய்யவும் என்பார் புலப்படத் தேற்றுவார்போல் என்றார். காமன்
மறைப்பொருள் - கலவிக்கரணம்; ஓவியங்கள் மெய்யாய ஆடவர் மகளிர்
போன்று தோன்ற என்பார் கைபடச் சுவராய்த் தோன்ற என்றார்; ஓவியத்
தொழிலின் சதுரப்பாடு கூறியவாறு. (47)
திருவிற்கான்
மணிப்பூ ணாகம்
பலகையாத் தெண்முத் தார
அருவிக்கால் வரைமென் கொங்கைச்
சூரொட்டி யாடி வென்றும்
மருவிக்கா முகரைத் தங்கள்
வடிக்கண்வேன் மார்பந் தைப்பக்
கருவிக்சூ தாடி வென்றுங்
கைப்பொருள் கவர்தல் செய்வார். |
(இ
- ள்.) காமுகரை மருவி - (பொருட்பெண்டிர்) காமுகரைச்
சேர்ந்து, திருவில் கால் - அழகிய ஒளியை வீசுகின்ற, மணிப்பூண் ஆகம்
- மணிகளாலாகிய அணிகளை யணிந்த (அவர்) மார்பையே, பலகையா -
பலகையாகக் கொண்டு (அதிலே), தெண் முத்து ஆரம் - தெளிந்த முத்து
மாலையாகிய, அருவிகால் - அருவியை ஒழுக்குகின்ற, வரை மென்
கொங்கை - மலை போன்ற மெல்லிய கொங்கைகளாகிய, சூது -
வல்லுகளை, ஒட்டி - ஒற்றி (பணயம் வைத்து), ஆடி வென்றும் - ஆடி
வெற்றி பெற்றும், தங்கள் - தங்களுடைய, வடிக்கண் வேல் - மாவடுப்
போன்ற கண்களாகிய வேல்கள், மார்பன் தைப்ப - (அவர்கள்) மார்பிற்
றைக்கும்படி, கருவி - கருவியாகிய, சூது ஆடி வென்றும் சூதினை
வென்றும் - (அவர்) கைப் பொருள்களைக் கவர்ந்து கொள்வார்கள் எ - று.
கொண்டு
அதில் என்னுஞ் சொற்கள் வருவிக்கப்பட்டன. ஒட்டி
யென்பதற்குக் கொங்கைக் கேற்பப் பொருந்தச் செய்து என்றும், சூதிற்
கேற்பப் பந்தயடம வைத்து என்றும் பொருள் கொள்க. வடி - மாவடு;
கூர்மை யெனினும் பொருந்தும். வடிக்கண் வேல் மார்பந் தைத்தலைக்
கலவிப் போருடனும் சூதுப் போருடனும் இயைத்துக் கொள்க. கருவிச் சூது
- கருவியாலாடுஞ் சூதெனலுமாம். கருவி - சூதாட்டத்திற்குரிய கவறு,
வல்லு முதலியன. இருவகை வென்றி யாலும் பொருள் கவர்வாரென்றார்.
(48)
தண்பனி
நீரிற் றோய்த்த மல்லிகைத் தாம நாற்றி
விண்படு மதியந் தீண்டும் வெண்ணிலா முற்றத் திட்ட
கண்படை யணைமேற் கொண்டு காமனுங் காமுற் றெய்தப்
பண்பல பாடி மைந்த ராவியைப் பரிசில் கொள்வார். |
(இ
- ள்.) (பரத்தையர்) தண்பனி நீரில் தோய்த்த - குளிர்ந்த பனி
நீரில் நனைத்த, மல்லிகைத் தாமம் நாற்றி - மல்லிை மலர்மாலைகளைத்
தொங்கவிட்டு, விண்படு மதியம் தீண்டும் - ஆகாயத்திற்
|