II


100திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இருபத்தைந்தாவது பழியங்சின படலம்

[அறுசீரடியாசிரியவிருத்தம்]
ஈறிலான் செழிய னன்புக் கெளியவ னாகி மன்றுள்
மாறியா டியகூத் தென்சொல் வரம்பின தாமே கங்கை
ஆறுசேர் சடையான் றானோ ரரும்பழி யஞ்சித் தென்னன்
தேறலா மனத்தைத் தேற்றுந் திருவிளை யாடல் சொல்வாம்.

     (இ - ள்.) ஈறு இலான் - அழிவில்லாதவனாகிய இறைவன், செழியன்
அன்புக்கு எளியவனாகி இராசசேகர பாண்டியன் அன்பிற்கு எளியனாய்,
மன்றுள் மாறி ஆடிய கூத்து - வெள்ளியம்பலத்திலே கான் மாறியாயி
திருக்கூத்து, என் சொல்வரம்பினது ஆமே - எனது சொல்லின் எல்லையுட்
படுவதாமோ, கஙகை ஆறுசேர் கடையான் - (இனி) கங்கையாறு பொருந்திய
சடையையுடையனாகிய சோமசுந்தரக் கடவுள், ஓர் அரும்பழி அஞ்சி - ஒரு
கொடும்பழியை அஞ்சி, தென்னன் தேறலா மனத்தைத் தேற்றும் -
குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் தெளிவித்த,
திருவிளையாடல் சொல்வாம் - திருவிளையாடலைக் கூறுவாம்.

     எளியவ னாயினமையாற் கூத்தாடினான் என்பதொரு நயமுங் காண்க.
ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு, தான், அசை : முதல் வேற்றுமைச்
சொல்லுமாம், பருயின் கொடுமையை விளக்குவார் ‘ஓர் அரும்பழி’ என்றார்;
அறிதற்கரிய பழி எனப்பொருள் படுமாயினும் அத்துணைச் சிறப்பின் றென்க.
தேறலா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (1)

இனையநாட் சிறிதுசெல்ல விராசசே கரன்றன் காதற்
றனையனாங் குலோத்துங் கற்குத் தன்னர சிருக்கை நல்கி
வினையெலாம் வென்று ஞான வெள்ளியம் பலத்து ளாடுங்
கனைகழ னிழலற் பின்னிக் கலந்துபே ரின்ப முற்றான்.

     (இ - ள்.) இனைய நாள் சிறிது செல்ல - இங்ஙனமாய நாட்கள் சில
கழிய, இராசசேகரன் தன் காதல் தனையனாம் குலோத்துங்கற்கு - இராசசேகர
பாண்டியன் தன் அன்பிற்குரிய புதல்வனாகிய குலோத்துங்கனுக்கு, தன்
அரசிருக்கை நல்கி - தனது அரசியலைத் தந்து, வினை எலாம் வென்று -
வினைகளை யெல்லாம் வென்று போக்கி, ஞான வெள்ளி அம்பலத்துள்
ஆடும் கனைகழல் நிழலில் - ஞானமயமாகிய வெள்ளி மன்றின்கண்
ஆடியருளும் ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடி நீழலில், பின்னிக்
கலந்து பேரின்பம் உற்றான் - இரண்டறக் கலந்து பேரின்பத்தை அடைந்தான்.