சிறிது - சில. அரசிருக்கை
- அரியணை. வினையெலாம் வென்று -
வினைகளை எஞ்சாமற் கெடுத்து. கழல் : ஆகுபெயர். இரண்டறக்
கலந்தென்பார் பின்னிக் கலந்து என்றார். (2)
குரவன்செங்
கோல்கைக் கொண்ட குலோத்துங்க வழுதி
செங்கண் அரவங்கம் பூண்ட கூட லாதிநா யகனை நித்தம்
பரவன்பின் வழிபா டானாப் பத்திமை நியமம் பூண்டான்
இரவஞ்சுங் கதுப்பி னல்லா ரீரையா யிரவ ருள்ளான். |
(இ
- ள்.) குரவன் செங்கோல் கைக்கொண்ட குலோத்துங்க வழுதி -
தந்தையினது செங்கோலைக் கையிற்கொண்ட குலோத்துங்க பாண்டியன்,
செங்கண், அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை - சிவந்த
கண்களையுடைய பாம்புகளைத் திருமேனியில் அணிந்த மதுரையில்
எழுந்தருளிய சோமசுந்தரக்கடவுளை, நித்தம் அன்பின் பரவு வழிபாடு
ஆனாப் பத்திமை நியமம் பூண்டான் - நாடோறும் அன்பினாற் பூசிக்கும்
வழிபாடாகிய நீங்காத பத்தி நியமத்தை மேற்கொண்டவன்; இரவு அஞ்சும்
கதுப்பின் நல்லார் ஈரையாயிரவர் உள்ளான் - இருளும் அஞ்சுங்
கூந்தலையுடைய மனைவியர் பதினாயிரவரை யுடையவன்.
குரவன்
- தந்தை. அரவினையும் என்பினையும் அணிந்த என்றுமாம்.
வழிபாடாகிய நியமம் என்க. நியமம் - செய்கடன். பூண்டான்; அவன்
உள்ளவனாயினான்; என முற்றாக வுரைத்தலுமாம். கூந்தலின் கருமைக்கு
முன்னிற்கலாற்றாது இரவும் அஞ்சு மென்க. (3)
[கொச்சக்கலிப்பா]
|
அப்பதினா
யிரவர்க்கு மொவ்வொருத்திக் கவ்வாறாய்
ஒப்பரிய வறுபதினா யிரங்குமர ருளரவருட்
செப்பரிய வல்லாண்மைச் சிங்கவிள வேறனையான்
வைப்பனையான் முதற்பிறந்த மைந்தன்பே ரனந்தகுணன். |
(இ
- ள்.) ஒவ்வொருத்திக்கு அவ்வாறாய் - ஒவ்வொரு மனைவிக்கும்
ஆறு ஆறாக, அப்பதினாயிரவர்க்கும் - அந்தப் பதினாயிரம் மகளிர்க்கும்,
ஒப்பு அரிய அறுபதினாயிரம் குமரர் உளர் - ஒப்பில்லாத அறுபதினாயிரங்
கமரர்கள் உளராயினார்; அவருள் - அக்குமரருள்? மதல் பிறந்த மைந்தன் -
முதலிற் றோன்றி புதல்வன், செப்பு அரிய வல் ஆண்மைச் சிங்க இள ஏறு
அனையான் - சொல்லுதற்கரிய வலிய ஆண்மையையுடைய இளமை
பொருந்திய ஆண்சிங்கத்தை ஒத்தவன்; வைம்பு அனையான் - வைப்பு
நிதியைப் போன்றவன்; பேர் அனந்த குணன் - அவன் பெயர்
அனந்தகுணன்.
ஒருத்தி,
ஆறு என்பன இரட்டித்த வழி ஒவ்வொருத்தி, அவ்வாறு
என்றாயின; "எண்ணிறையளவும்" "ஒன்ப தொழித்தவெண் ணொன்பது
மிரட்டின்" என்னும் நன்னூற் சூத்திரங்கள்
நோக்குக. ஆக்கச்
சொற்கொடுத்து உளராயினார் என விரிக்க. வல்லாண்மை - மிக்க
ஆண்மை. (4)
|