(இ
- ள்.) அவ்வாறு அவ்வணங்கு அனையாள் உயிர் இழந்தாள் -
அவ்வண்ணமாக அத்தெய்வ மகளையொத்த பார்ப்பனி உயிர் துறந்தாள்;
அவ்வேலை - அப்பொழுது, வெம் ஆளி ஏறு அனையான் ஒரு வேடன் -
கொடிய சிங்க வேற்றினையொத்தவனாகிய ஒரு வேடன், செவ்வாளி ஏறிட்ட
சிலையுடையான் - தெரிந்தெடுத்த வாளியினை ஏறிட்ட வில்லையுடையவனாய்,
வெயிற்கு ஒதுங்கு நிழல் தேடி - வெயிலுக்கு ஒதுங்கி யிருக்கத்தக்க
நிழலினைத் தேடி, அவ்வால நிழல் எய்தி இளைப்பு ஆற அயல் நின்றான் -
அந்த ஆலமரத்தின் நீழலையடைந்து இளைப்பாறுதற்கு அம்மரத்தின்
பக்கலில் நின்றான்.
செவ்வாளி
- வடிவு செவ்விதாகிய அம்பு என்றும், குருதி தோய்ந்து
சிவந்த அம்பு என்றும் கூறலுமாகும்; பார்ப்பனியைக் கொன்ற
கொடுமையுடையதன்று என்னுங் குறிப்புத் தோன்றக் கூறிற்றுமாம். நிழல்தேடி
என்றமையால் அவ்வால் ஒன்றே அங்கே நிழல் மரமாயது என்பது
பெறப்படும். பார்ப்பனியைக் கண்டவனுமல்லனென்பார் 'அயல் நின்றான்'
என்றார். (9)
தண்ணீர்க்குப் போயாவி தலைப்பட்ட மறையவனும்
உண்ணீர்கைக் கொண்டுமீண் டொருங்கிருந்த குழவியொடும்
புண்ணீர்வெள் ளத்துக்கா றாழந்துயிரைப் புறங்கொடுத்த
பண்ணீர மழலைமொழிப் பார்ப்பனியைக் கண்ணுற்றான். |
(இ
- ள்.) தண் நீர்க்குப் போய் ஆவி தலைப்பட்ட மறையவனும் -
தண்ணிய நீரினைக் கொணர்தற் பொருட்டுச் சென்று நீரோடையையடைந்த
அவ்வந்தணனும், உண் நீர் கைக்கொண்டு மீண்டு - உண்ணும் நீரினைக்
கைக் கொண்டு திரும்பி, ஒருங்கு இருந்த குழவியொடும் புண்ணீர்
வெள்ளத்துக் கால் தாழ்ந்து - உடன் சேரவிருந்த குழவியோடும் குருதி
வெள்ளத்தில் ஆழ்ந்து, உயிரைப் புறம் கொடுத்த - உயிரையிழந்த, பண்நீர
மழலை மொழிப் பார்ப்பனியை கண்ணுற்றான் - பண்போலும் இனிமைத்
தன்மையையுடைய மழலைச் சொல்லையுடைய தன் மனைவியைப் பார்த்தான்.
ஆவி
- பொய்கை. குழவியொடும் தாழ்ந்திருந்த பார்ப்பனியென்றும்
தன் உயிரைப் புறங்கொடுத்த பார்ப்பனியென்றும் கொள்க. வெள்ளத்துக்கால்
என்பதில், அத்து : சாரியை. கால் : ஏழனுருபு. புறங்கொடுத்தல் - புறம்பே
போகவிடுத்தல். நீர - நீர்மையுடைய; ஈர எனப் பிரித்து, குளிர்ந்த
என்றுரைத்தலுமாம். (10)
அயில்போலுங்
கணையேறுண் டவ்வழிபுண் ணீர்சோர
மயில்போல வுயிர்போகிக் கிடக்கின்றாண் மருங்கணைந்தென்
உயிர்போல்வா யுனக்கிதுவென் னுற்றதென மத்தெறிதண்
தயிர்போலக் கலங்கியறி வழிந்துமனஞ் சாம்பினான். |
(இ
- ள்.) அயில் போலும் கணை ஏறுண்டு - வேல் போலுங் கூரிய
கணை தைத்து, அவ்வழி புண்நீர் சோர - அவ்வழியே குருதியொழுக, உயிர்
போகி மயில் போலக் கிடக்கின்றாள் மருங்கு அணைந்து - உயிர் நீங்கி
மயில் போன்று கிடக்கின்ற மனைவியின் அருகிற் சென்று, என் உயிர்
|