போல்வாய் - எனது
உயிர் போன்றவளே, உனக்கு இது உற்றது என் என -
உனக்கு இத்தீமை நேர்ந்தது என்னையென்று, மத்து எறி தண் தயிர் போலக்
கலங்கி - மத்தினாற் கலக்கப்பட்ட தண்ணிய தயிர் போலக் கலக்கமுற்று,
அறிவு அழிந்து மனம் சாம்பினான் - அறிவிழந்து மனஞ் சோர்ந்தான்.
வலிய
கணையென்பார் 'அயில்போலுங் கணை' என்றார். அவ்வழி -
அவ்விடத்தில் என்றுமாம். அம்பு தைத்த மயில் போலவெ 1. நினக்கும் இது
நேர்ந்ததோவென இரங்கினான். கலங்கி - உடைந்து; திட்பங்கெட்டு. (11)
இனையதோர் பெண்பழியை யாரேற்றா ரெனத்தேர்வான்
அனையதோர் பழுமரத்தின் புறத்தொருசா ரழல்காலும்
முனையதோர் கணையோடு முடக்கியகைச் சிலையேந்தி
வினையயதோர்ந் தெதிர்நின்ற விறல்வேடன் றனைக்கண்டான். |
(இ
- ள்.) இனையது ஓர் பெண் பழியை ஏற்றார் யார் எனத்
தேர்வான் - இங்ஙனமாகிய ஒரு பெண் பழியை ஏற்றுக் கொண்டவர் யார்
என்று ஆராயப் புகுந்த அம் மறையோன், அனையது ஓர் பழுமரத்தின்
புறத்து ஒரு சார் - அந்த ஆலமரத்தின் புறத்தே ஒரு பக்கத்தில், அழல்
காலும் முனையது ஓர் கணையோடும் - நெருப்பினை உமிழும்
முனையினையுடைய ஒரு வாளியோடும், முடக்கிய சிலை கை ஏந்தி -
வளைத்த வில்லைக் கையிலேந்தி, வினையது ஓர்ந்து எதிர் நின்ற விறல்
வேடன் தனைக் கண்டான் - தனக்கு வாய்க்கும் வேட்டை வினையினை
ஆராய்ந்து எதிரில் நின்ற வெற்றி பொருந்திய வேடனைக் கண்டான்.
பெண்பழி
- பெண்கொலை புரிந்த பழி; அதன் கொடுமையை விளக்க
'இனையதோர் பெண்பழி' என்றான்; இத்தகைய பழியை யேற்பாரும் உளரோ
வென்று கருதினான் என்க. தேர்வான் : பெயர். அனையது, : சுட்டு; ஓர் :
அசை. முனையது; குறிப்புமுற்று எச்சமாகியது. வினையது, அது : பகுதிப்
பொருள் விகுதி. (12)
[கலிநிலைத்துறை]
|
காப்பணி
தாளன் வாளொடு வீக்கிய கச்சாளன்
கூர்ப்பக ழிக்கோ லேறிடு வில்லன் கொலைசெய்வான்
ஏற்பன கைக்கொண் டிவ்விடை நின்றா னிவனேயென்
பார்ப்பனி யைக்கொன் றின்னுயி ருண்டு பழிபூண்டான். |
(இ
- ள்.) காப்பு அணிதாளன் - செருப்பினையணிந்த
தாளையுடையனாய், வாளொடு வீக்கிய கச்சாளன் - வாளோடு கட்டிய
கச்சினையுடையனாய், கூர் பகழிக்கோல் ஏறிடு வில்லன் - கூரிய
அம்பினை ஏறிட்ட வில்லையுடைனாய், கொலை செய்வான் - கொலை
செய்தற்கு, ஏற்பன கைக் கொண்டு இவ்விடை நின்றான் இவனே -
ஏற்றவற்றைக் கையிற்கொண்டு இங்கு நிற்பகவானாகிய இவனே, என்
பார்ப்பனியைக் கொன்று இன் உயிர் உண்டு பழி பூண்டான் - என்
மனைவியைக் கொன்று அவள் இனிய உயிரைப் பருகிப் பழிபூண்டவன்.
|