ஒழுக அழுது, கடிது ஏகா
- விரைந்து சென்று, ஆண்தகை மாறன் கூடல்
அணைந்தான் - ஆண்டன்மையையுடைய பாண்டியனது மதுரையை
அடைந்தான்.
ஒக்கல்
- அரையின் பக்கம். தாண்ட - தவழ. இட்டான், அணைத்தான்
என்பன முற்றெச்சங்கள். அளியன் - பிறர் இரங்கத் தக்கான். (15)
மட்டவிழ்
தாரான் வரயின் மருங்கே வந்தெய்தா
உட்டுக ளில்லா வேடனை முன்விட் டுயிரன்னாள்
சட்டக* நேரே யிட்டெதிர் மாறன் றமர்கேட்பக்
கட்டுளி சிந்தா முறையிடு கின்றான் கையோச்சா. |
(இ
- ள்.) மட்டு அவிழ்தாரான் வாயில் மருங்கே வந்து எய்தா -
மணத்தொடு மலர்ந்த மலர் மாலையையணிந்த பாண்டியனது கோயில்
வாயிலை வந்தடைந்து, உள்துகள் இல்லா வேடனை முன்விட்டு -
மனத்திலே குற்றமில்லாத வேடனை முன்னே விட்டு, உயிர் அன்னாள்
சட்டகம் நேரே இட்டு - உயிர் போன்ற மனைவியின் உடலை எதிரே
கிடத்தி, மாறன் தமர் கேட்ப - பாண்டியன் தமராகிய அமைச்சர்
முதலியோர் கேட்ப, எதிர் - அவர்கட்கு நேரே, கை ஓச்சா - கையை
மேலே ஒச்சி, கண் துளி சிந்தா முறையிடுகின்றான் - கண்ணீரைச்
சொரிந்து முறையிடா நின்றான்.
உட்டுகளில்லா
வேடன் என்றது புறத்தே கொலை செய்யுங்
கருவிகளையுடையனாயினும் பார்ப்பனியைக் கொல்லாமையால் அகத்தே
குற்றமில்லானாகிய வேடன் என்றவாறு. சட்டகம் - வடிவு; உடம்பு.
அரசனுக்குத் தமராவார் அமைச்சர் முதலாயினார். எய்தா, சிந்தா ஓச்சா
என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். (16)
கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையையோ
தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையையோ
மாமதி வானோன் வழிவரு மைந்தர முறையேயோ
தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.
|
(இ
- ள்.) கோமுறை கோடாக் கொற்றவர் ஏறே முறையேயோ -
அரசியல் முறை கோணாத மன்னருள் ஆண் சிங்கம் போன்றவனே
முறையோ, தாமரையாள் வாழ் தண்கடி மார்பா முறையேயோ - தாமரை
மலரில் வசிக்குந் திருமகள் வாழ்கின்ற தண்ணிய விளக்கமமைந்த
மார்பினை யுடையவனே முறையோ, மாமதி வானோன் வழி வரும் மைந்தா
முறையேயோ - பெருமை பொருந்திய திங்கட்புத் தேளின் மரபில் வந்த
மைந்தனே முறையோ, தீமை செய்தாய் போல் செங்கை குறைத்தாய்
முறையேயோ - குற்றஞ் செய்தவன் போலச் சிவந்த கையைத் தறித்துக்
கொண்டவனே முறையோ.
கோல்
நிலை திரியாத கொற்றத்தினையுடைய அரசருளெல்லாஞ்
சிறந்தவனென்க. முறையேயோ என்றது நினது நாட்டிலும் இத்தகைய
தீமை நிகழ்வது முறைதானோ என்றவாறு. வலியரால் நலிவுற்றோர்
இங்ஙனம்
(பா
- ம்.) * கட்டழல்.
|