துளியென்பார் எறிதுளி
என்றும் கூறினார். புயல் மழை யென்னும் பொருள்
தருதலை புயலென்னும் வாரி என்பதனா னறிக. இழை - இயற்றப்பட்ட.
மழைகள் வெள்குதல் நாணுதலும், வெண்ணிற மாதலும், வருணன்
வெள்குதலாவது உளங்கூசுதல். (17)
நடுங்கினன்
கழிந்த வச்ச நாணமீ தூர மானம்
ஒடுங்கின னுள்ளத் துள்ளோ ருவகைவந் தெய்தப் பொற்பூத்*
தடங்கரை குறுகா முன்னோய் தணிந்துபின் றோய்ந்து பாசம் மடங்கினன் மடங்கா வன்பின்
வள்ளலைப+பூசை செய்வான்.. |
(இ
- ள்.) (அங்ஙனம் நின்ற வருணன்) நடுங்கினன் - உடல் நடுங்கி,
கழிந்த அச்சம் நாணம் மீதூர - மிகுந்த அச்சமும் நாணமும் மிக, மானம்
ஒடுங்கினன் -மானம் குறைந்து, உள்ளத்துள் ஓர் உவகை எய்த -
மனததின்கண் ஒரு மகிழ்ச்சி வந்து பொருந்த, பொற்பூத் தடம் கரை
குறுகாமுன் - பொற்றாமரை வாவியின் கரையை அடைதற்கு முன்னரே, நோய்
தணிந்து - பிணி நீங்கப்பெற்று, பின் தோய்ந்து - பின் நீராடி, பாசம்
மடங்கினன் - பாசத்தின் வலி மடங்கப்பெற்று, மடங்கா அன்பின் வள்ளலைப்
பூசை செய்வான் - குறையாத அன்புடன் வள்ளலாகிய சோமசுந்தக் கடவுளைப் பூசிக்கத் தொடங்கினான்.
கழிந்த
: கழி என்னும் உரிச்சொல்லடியாகவந்த பெயரெச்சவினை
மீதூர்தல் - மேன்மேல் அடர்தல். மானம் - தாழாமை. முன்பில்லாதோர்
வேகை என்பார் ஓர் உவகை என்றார். தடங்கரை குறுகி அங்ஙனங் குறுகு
முன்னே நோய் தணிந்து என விரிக்க. குறுகுமுன் - குறுகுதற்கு முன்; என
வழக்குப்பற்றி வந்தது; பண்புத் தொகையுமாம். நோய் என்றது முதற்
காண்டத்து இறுதிப் படலத்திற் கூறிய வயிற்று நோயை. பாசம் - ஆணவம்
முதலியன. நடுங்கினன், ஒடுங்கினன் மடங்கினன் என்பன முற்றெச்சங்கள், (18)
(பா
- ம்.) * உவகைவந்தே மக்கஞ்சத். +அடங்கின னடங்கா
வன்பினண்ணலை.
|