II


பழியஞ்சின படலம்113



ஏறுண்டவாறு எவன் - தைத்த விதம் என்னை. நின்றார் : பெயர். ஐயா :
பன்மையி லொருமை. (24)

இக்கொலை செய்தான் யானல னென்னா துளனென்னத்
தக்கவ னேயோ தறுகண் மறவ னுரைமெய்யோ
சிக்க வொறுத்தா லல்லதை யுண்மை செப்பானென்
றொக்க வுரைத்தார் மந்திர ருள்ளார் பிறரெல்லாம்.

     (இ - ள்.) (என்ற வளவில்) மந்திரர் உள்ளார் பிறர் எல்லாம் -
அமைச்சருளிட்ட அனைவரும், தருகண் மறவன் - வன்கண்மையுடைய
வேடனாகிய இவன், இக்கொலை செய்தான் யான் அலன் என்னாது -
இந்தக் கொலையினைச் செய்தவன் யானல்லேன் என்று கூறாது, உளன்
என்னத் தக்கவனேயோ - யான் செய்தேன் என்று உண்மை கூறுந்
தகுதியையுடையவனோ, உரை மெய்யோ - (இவன் கூறும்) சொல்
மெய்யாகுமோ, சிக்க ஒறுத்தால் அல்லது உண்மை செப்பான் -
மிகுதியாகத் தண்டித்தாலன்றி உண்மையைக் கூறமாட்டான், என்று ஒக்க
உரைத்தார் - என்று ஒரு சேரக் கூறினர்.

     அன் விகுதி தன்மைக்கண் வந்தது. உளன் - செய்துளேன்.
கொடுமையை இயல்பாகவுடைய வேடனாகலின் இவன் அலனென்னாது
உளனென்னத் தக்கவனோ என்க. ஏகாரம் இசை நிறை. ஓகாரம்
எதிர்மறைப் பொருட்டு. சிக்க - யாப்புடைத்தாக; நன்கு. அல்லதை, ஐ :
சாரியை. அமைச்சரும் பிறருமாக உள்ளாரெல்லாரும்
சேரவுரைத்தாரென்க. (25)

மன்னன் றானு மற்றது செய்ம்மின் னெனமள்ளர்
பின்னந் தண்டஞ் செய்தனர் கேட்கப் பிழையில்லான்
முன்னஞ் சொன்ன சொற்பெய ரானாய் மொழியாநின்
றின்னந் தீரத் தேருமி னென்றா னென்செய்வான்.

     (இ - ள்.) மன்னன் தானும் மற்றது செய்ம்மின் என - அரசனும்
அதனைச் செய்யுங்கள் என்று கட்டளையிட, மள்ளர் பின்னம் தண்டம்
செய்தனர் கேட்க - ஏவலாளர் பின்பு தண்டத்தினைச் செய்து கேட்க,
பிழை இல்லான் - குற்றமற்ற அவ்வேடன், முன்னம் சொன்ன சொல்
பெயரானாய் மொழியா நின்று - முன் சொன்ன சொல்லினின்றும்
மாறுபடாது கூறாநின்று, இன்னம் தீரத் தேருமின் என்றான் -
இன்னும் முற்ற ஆராயுங்கள் என்று கூறினான்; என் செய்வான் -
(இதையன்றி) வேறு யாது செய்யவல்லன்.

     தான், மற்று என்பன அசைகள். பின்னம், முன்னம், இன்னம்
என்பவற்றில் அம் சாரியை; பகுதிப் பொருள் விகுதியுமாம். செய்தனர் :
முற்றெச்சம். தீர - முடிவுற. மொழியா நின்று என்பதனை முற்றாக்கி;
பிழையில்லான் மொழியா நின்றான்; பாண்டியன் தேருமின் என்றான்,
என்று பிறர் பொருள் கூறுவாராயினர். (26)