மின்னனை யாடன் செய்கடன் முற்றா மீண்டோனைத்
தன்னமர் கோயிற் கடைவயின் வைத்துத் தானேகிக்
கொன்னவில் வேலான் றங்கள் குடிக்கோர் குலதெய்வம்
என்ன விருந்தா ரடிகள் பணிந்தா னிதுகூறும். |
(இ
- ள்.) மின் அனையாள் தன் செய்கடன் முற்றா மீண்டோனை -
மின்னலையொத்த மனைவிக்கு இறுக்க வேண்டிய கடன்களைச் செய்து
முடித்துத் திரும்பி வந்த மறையோனை, தன் அமர் கோயில் கடைவயின்
வைத்து - தன்னால் விரும்பப்பட்ட அரண்மனை வாயிலில் வைத்து விட்டு,
கொல்நவில் வேலான் தான் ஏகி - கொலைத் தொழில் பயின்ற வேற்படை
யேந்திய பாண்டியன் தான் சென்று, தங்கள் குடிக்கு ஓர் குலதெய்வம் என்ன
இருந்தார் - தமது குடிக்கு ஒரு குலதெய்வமாக எழுந்தருளியுள்ள சோம
சுந்தரக் கடவுளின், அடிகள் பணிந்தான் இது கூறும் - திருவடிகளை
வணங்கி இதனைக் கூறா நின்றான்.
தவிராது
இறுக்கத் தக்கது என்பார் 'செய்கடன்' என்றார். தன் அமர்
கோயில் - தன்னால் விரும்பப்பட்ட கோயில்; தனது விருப்பம் பொருந்திய
கோயில் என விரித்தலுமாம். அமர்தல் - உளம் மேவுதல். குலதெய்வமென்று
உலகங் கூற என்றுமாம். பணிந்தான் : முற்றெச்சம். இது வென்றது பின்
வருவதனை. (31)
[கொச்சகக்
கலிப்பா]
|
மன்றாடு
மணியேயிம் மறவன்றான் பார்ப்பனியைக்
கொன்றானோ பிறர்பிறிதாற் கொன்றதோ விதுவறநூல்
ஒன்றாலு மளப்பரிதாக் கிடந்ததா லுன்னருளால்
என்றாழ்வு கெடத் தேற்றா யென்றிரந்தா னவ்வேலை. |
(இ
- ள்.) மன்று ஆடும் மணியே - வெள்ளியம்பலத்தில் ஆடியருளும்
மாணிக்கமே, இம்மறவன் தான் பார்ப்பனியைக் கொன்றானோ - இவ்வேடன்
தான் அப்பார்ப்பனியைக் கொன்றானோ (அன்றி), பிறர் பிறிதால்
கொன்றதோ - பிறர் பிற காரணத்தாற் கென்றதோ, இது அறநூல் ஒன்றாலும்
அளப் பரிதாக் கிடந்தது - இந் நிகழ்ச்சி அறநூல் முதலிய ஒன்றாலும்
அளந்தறிதற்கரியதாகக் கிடக்கின்றது; உன் அருளால் என் தாழ்வு
கெடத்தேற்றாய் என்று இரந்தான் - உனது திருவருளால் எனது குறைவுதீரத்
தெளிவிப்பாயாக என்று குறையிரந்தான்; அவ்வேலை - அப்பொழுது.
கொன்றதோ
இக்கொலையென்க. அறநூலாலும் வேறொன்றாலும்;
அறநூல்களுள் ஒன்றாலும் என்னலுமாம். அரிதாக என்பது ஈறுதொக்கது.
ஆல் : அசை. என் தாழ்வு - எனக்கு உண்டாகும் பழி. (32)
திருநகரின் புறம்பொருசார் குலவணிகத் தெருவின்கண்
ஒருமனையின் மணமுளதங் கந்தணனோ டொருங்குநீ
வருதியுன துளந்தேறா மாற்றமெலாந் தேற்றதுமென்
றிருவிசும்பி னகடுகிழித் தெழுந்ததா லொருவாக்கு.
|
|