(இ
- ள்.) திருநகரின் புறம்பு ஒருசார் வணிகர் குலத் தெருவின் கண்
- இத் திருநகரத்தின் புறம்பே ஒரு பக்கத்தில் வணிகர் குலத் தெருவிலுள்ள,
ஒரு மனையில் மணம் உளது - ஒரு வீட்டில் மணவினை நிகழ்வதுளது;
அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ வருதி - அவ்வில்லிற்கு
அம்மறையவனோடு நீ ஒரு சேர வருவாயாக; உனது உளம்தேறா மாற்றம்
எலாம் தேற்றுதும் என்று - உன் உள்ளந் தெளியாத மாறுபாட்டினையெல்லாம்
தெளிவிப்போமென்று, இரு விசும்பின் அகடு கிழித்து ஒரு வாக்கு எழுந்தது -
பெரிய வானினது வயிற்றைக் கீண்டு கொண்டு ஓர் அசரீரிவாக்கு எழுந்தது.
திருநகர்
- கோயில் எனலும் பொருந்தும். குலம் - சிறப்புமாம். மாற்றம்
- செய்தியென்றுமாம். விசும்பினின்றும் தோன்றியதனை 'விசும்பினகடு
கிழித்தெழுந்தது' என்றார். ஆல் : அசை. அவ்வேலை ஒரு வாக்கு எழுந்தது
என்க. (33)
திருவாக்குச்
செவிமடுத்துச் செழியன்றன் புறங்கடையிற்
பெருவாக்கு மறையவனோ டொருங்கெய்திப் பெரும்பகல்போய்க்
கருவாக்கு மருண்மாலைக் கங்குல்வாய்த் தன்னைவேற்
றுருவாக்கிக் கடிமனைபோ யொருசிறைபுக் கினிதிருந்தான். |
(இ
- ள்.) திருவாக்குச் செவிமடுத்து - அத் திருவாக்கினைக் கேட்டு,
செழியன் - பாண்டியன், தன் புறங்கடையில் பெருவாக்கு மறையவனோடு
ஒருங்கு எய்தி - தனது கடைவாயிலுள்ள மறைகளையுணர்ந்த அந்தணனோடும் ஒருங்கு கூடி, பெரும்
பகல் போய் - பெரிய பகற்பொழுது கழிந்து, கரு
ஆக்கும் மருள் மாலை கங்குல்வாய் - கருமையை உண்டாக்கும் மயங்கிய
மாலைப் பொழுதின் இருளில், தன்னை வேறு உருவாக்கி - தன்னை
வேற்றுருவமாக்கிக் கொண்டு, கடிமனை போய் ஒரு சிறைபுக்கு இனிது
இருந்தான் - மணவீடு சென்று ஒரு பக்கத்திற் புகுந்து இனிதே இருந்தனன்.
செவி
நிரம்பக் கேட்டான் என்பார் 'செவி மடுத்து' என்றார். புறங்கடை : இலக்கணப் போலி.
பெருவாக்கு - பெருமையுடைய வாக்கு; மறை. கரு -
கருமை. மருள்மாலை - பகலும் இரவும் மயங்கிய மாலை; மயக்கத்தைச்
செய்யும் மாலை. வேற்றுரு வாக்கல் - அரச கோலமின்றி வேறு கோலங்
கொள்ளல். பிறரால் அறியப்படாமல் இடையூறின்றி யிருந்தான் என்பார்
'இனிதிருந்தான்' என்றார். (34)
அன்றிறைவ னருளாலங் கவர்கேட்க வம்மனையின்
மன்றல்மகன் றனக்களந்த நாளுலப்ப மறலியிருட்
குன்றமிரண் டெனவிடுத்த கொடும்பாசக் கையினர்வாய்
மென்றுவருஞ் சினத்தவரி லொருசனிது விளம்புமால்.* |
(இ
- ள்.) அன்று இறைவன் அருளால் - அப்பொழுது சோம சுந்தரக் கடவுளின் திருவருளால்,
அங்கு அவர் கேட்க - அங்கே பாண்டியனும் மறையோனும் கேட்குமாறு, இம்மனையில் - இம்மண
வீட்டின்கண், மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப - மணமகனுக்கு வரையறுத்த வாழ்நாள்
முடிதலால், மறலி - கூற்றுவன், இரண்டு இருட்குன்றமென விடுத்த -
(பா
- ம்.) * வினவுமால்.
|