இவைபோன்ற பிறவற்றையும்
பெற்று, கற்பகம் எடுத்துக்காட்ட - கற்பகத்தரு
எடுத்துக் கொடுக்கவும் எ - று.
காந்தம்
: ஆகுபெயர். சந்தம் முதலியவற்றையும் பிறவற்றையும் என்க.
(19)
ஐங்கனி யமுத
மைந்து கௌவிய மமுது தூபஞ்
செங்கதிர் விளக்க மின்ன தேவரான் கொடுப்பச் சேற்கண்
நங்கைதன் பதியைப் பூசித் தாயிரி நாமங் கூறிப் பைங்கதிர்
முத்தஞ் சாத்தித் தொழுதடி பணிந்து நின்றான். |
(இ
- ள்.)
ஐங்கனி அமுதம் ஐந்து கௌவியம் அமுது தூபம்
செங்கதிர் விளக்கம் இன்னதேவர் ஆன் கொடுப்ப - ஐந்து கனிவளையும்
ஐந்து அமிர்தங்களையும் ஐந்து கௌவியங்களையும் திருவழுதையும்
தூபத்தையும் செவ்வொளியினையுடைய தீபத்தையும் இவை போன்ற
பிறவற்றையும் காமதேனு வழங்கவும், சேல்கண் நங்கை தன் பதியைப் பூசித்து
- அங்கயற்கண்ணம்மையின் நாயகராகிய சோம சுந்தரக் கடவுளைப் பூசித்து,
ஆயிரம் நாமம் கூறிப் பைங்கதிர் முத்தம் சாத்தி - ஆயிரம்
திருநாமங்களையும் கூறிப் பசிய ஒளியையுடைய முத்துக்களைச் சாத்தி,
தொழுது அடிபணிந்து நின்றான் - திருவடியை வணங்கிக் கும்பிட்டு நின்றான்.
ஐங்கனி
வாழைக்கனி முதலியன. ஐந்து என்பதனை அமுதத் தோடும்
கௌவியத்தோடும் கூட்டுக. இன்ன : குறிப்பு வினைப்பெயர். ஒரு
திருப்பெயருக்கு ஒரு முத்தாக சாத்தி என்க. (20)
அருச்சனை
யுவந்த வாதி யமலனீ யாது வேண்டிற்
றுரைத்தியென் றோதநீர்க்கோ னொல்லைதாழ்ந் தொன்றி
னாலுங்
கரைத்திட வரிய விந்தக் கடியவென் வயிற்று நோய்நின்
திரைத்தட மாடு முன்னே* தீர்ந்திடப் பெற்றே னெந்தாய். |
(இ
- ள்.) அருச்சனை உவந்த ஆதி அமலன் - அவன் பூசனையை
மகிழ்ந்து ஏற்ற முதல்வனாகிய சொக்கலிங்கக் கடவுள், நீ வேண்டிற்று யாது
உரைத்தி என்று ஓத - நீ விரும்பியது யாது அதனை உரைப்பாயென்று கூற,
நீர்க்கோன் - கடற்றலைவனாகிய வருணன், ஒல்லை தாழ்ந்து - விரைவில்
வணங்கி, எந்தாய் - எந்தையே, ஒன்றினாலும் கரைத்திட அரிய - ஒன்றாலும்
போக்குதற்கரிய, இந்தக் கடிய என் வயிற்று நோய் - இந்தக் கொடிய எனது
வயிற்று நோயானது, நின் திரைத்தடம் ஆடும் முன்னே தீர்ந்திடப் பெற்றேன்
-உன்னுடைய அலைகளையுடைய பொற்றாமரை வாவியில் ஆடுதற்கு முன்னே
நீங்கப்பெற்றேன்.
ஒன்றினாலும்
- மணிமந்திரம் மருந்து என்பவற்றுள் எதனாலும். அரிய
கடிய நோய் என்க. (21)
(பா
- ம்.) * ஆடியின்னே.
|