II


120திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கொள்க. புனிற்றுக் கற்றா - ஈன்றணிய கன்றினையுடைய பசு கன்று என்பது
வலித்தது. ஆல் இரண்டும் அசை. (39)

மணமகனே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய்
அணியிழையார் வாழ்த்தொலி*போ யழுகையொலி                                 யாய்க்கழியக்+
கணமதனிற் பிறந்திறுமிக் காயத்தின் வரும்பயனை
உணர்வுடையார் பெறுவருணர் வொன்றுமிலார்க்                                 கொன்றுமிலை.

     (இ - ள்.) மணமகனே பிண மகனாய் - மணப் பிள்ளையே உயிர்
கழிந்த பிணமாகவும், மணப்பறையே பிணப் பறையாய் - மண வாத்தியமே
சாப்பறையாகவும், அணி இழையார் வாழ்த்து ஒலி அழுகை ஒலியாய் போய்க்
கழிய - அணியப்பட்ட கலன்களையுடைய மங்கல மகளிரின் வாழ்த்தொலியே
அழுகையொலியாகவும் மாறி முடிய, கணம் அதனில் பிறந்து இறும்
இக்காயத்தின் வரும் பயனை - கணப்பொழுதிற்றோன்றி மறையும்
இவ்வுடலினாலாய பயனை, உணர்வு உடையார் பெறுவர் - அறிவுடையார்
அடைவர்; உணர்வு ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை - அறிவு சிறிதும்
இல்லாதவர்க்கு அப்பயனெய்துதல் சிறிதும் இல்லை.

     உயிர் நீங்கிய உடம்பைப் பிணமகன் என்றார்;

"படுமகன் கிடக்கை காணூஉ"

என்பது புறப்பாட்டு. போய்க்கழிய எனக் கூட்டி, மாறி முடிறய
வென்றுரைக்க.இந்நிகழ்ச்சியை எடுத்துக் காட்டாகக் கொண்டு, இங்ஙனம்
கணத்திற் பிறந்தழியும் காயம் என்றார். இக்காயம் - இத்துணை
நிலையாமையுடைய உடம்பு. காயத்தின் வரும் பயனாவது பிறவாமைக்
கேதுவாகிய அறத்தினைச் செய்து கோடல். நில்லாதவுடம்பு நிற்கும்
பொழுதே நிலையாய அறத்தைச் செய்ய வேண்டுமென்றவாறு. ஒன்றும்
என்பது சிறிது மென்னும் பொருட்டு.

"மன்றங் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே
வலிக்குமா மாண்டார் மனம்"

என்னும் நாலடியார்ச் செய்யுளின் பொருள் இதில் விளக்கமுற
அமைந்திருத்தல் காண்க. (40)

கண்டானந் தணனென்ன காரியஞ்செய் தேனெனத்தன்
வண்டார்பூங் குழன்மனைவி மாட்சியினுங் கழிதுன்பங்
கொண்டான்மற் றவனொடுந்தன் கோயில்புகுந் தலர்வேப்பந்
தண்டாரா னமைச்சர்க்கும் பிறர்க்குமிது சாற்றினான்
.

     (பா - ம்.) * வாழ்த்தொலியே. +கழிந்த.