II


பழியஞ்சின படலம்121



     (இ - ள்.) அந்தணன் கண்டான் - மறையோன் அதனைக் கண்டு,
என்ன காரியம் செய்தேன் என்று - யாது காரியம் செய்து விட்டேனென்று
இரங்கி, தன் வண்டு ஆர் பூங்குழல் மனைவி மாட்சியினும் கழி துன்பம்
கொண்டான் - தன் வண்டு மொய்க்கும் பூவையணிந்த கூந்தலையுடைய
மனைவியினது இறப்பினும் மிக்க துன்பத்தைக் கொண்டான்; அலர் வேப்பம்
தண் தாராள் - மலர்ந்த வேப்பம் பூவாலாகிய தண்ணிய மாலையையணிந்த
பாண்டியன், அவனொடும் தன் கோயில் புகுந்து - அவ் வேதியனுடன் தனது
மாளிகையை அடைந்து, அமைச்சர்க்கும் புறர்க்கும் இது சாற்றினான் -
அமைச்சர்களுக்கும் ஏனையோர்க்கும் இதனைக் கூறினான்.

     என்ன காரியஞ் செய்தேன் என்றது குற்றமில்லாத வேடன் மேல்
இவ்வடாத பழியைச் சுமத்தி அவனையொறுக்குமாறு செய்தேனே என்று
கழிந்ததற் கிரங்கியபடி. மாட்சி - இறப்பு; மாள் : பகுதி. மாண்ட துன்பத்தினும் மிக்க துன்பமென்க. மற்று : அசை. வேம்பு என்பது அம் சாரியை பெற்று
வலித்தது. (41)

மறையவனை யின்னுமொரு மணமுடித்துக் கோடியென
நிறையவரும் பொருளீந்து நீபோதி யெனவிடுத்துச்
சிறையழுவத் திடைக் கிடந்த செடித்தலைய விடிக்குரல
கறையுடல்வே டனைத்தொடுத்த கால்யாப்புக் கழல்வித்து.

     (இ - ள்.) மறையவனை நீ இன்னும் ஒரு மணம் முடித்துக் கோடி
என - அந்தணனை (நோக்கி) நீ இன்னும் ஒரு மணஞ்செய்து கொள்வாயாக
என்று, அரும்பொருள் நிறைய ஈந்து - அரிய பொருளை நிறையக் கொடுத்து,
போதி என விடுத்து - செல்க என்று விடை கொடுத்தனுப்பி, சிறை அழுவத்து
இடைக் கிடந்த - சிறைச்சாலையின் கண் (மனக்கவலையொடுங்) கிடந்த,
செடித்தலைய இடிக்குரல கறை உடல் வேடனை - முடைநாற்றம் பொருந்திய
தலையினையும் இடி போன்ற குரலினையும் கரிய உடம்பினையுமுடைய
வேடனை, தொடுத்த கால் யாப்புக் கழல்வித்து - பூட்டிய கால் விலங்கினைக்
கழற்றச் செய்து.

     கோடி - கொள்ளுதி; பகுதி முதனீண்டது : த் : எழுத்துப் பேறு;
போதி என்பதிலும் த் எழுத்துப் பேறே. அழுவம் - பரப்பு, அரண். தலைய,
குரல என்பவற்றில் அ அசை; குறிப்புப் பெயரெச்சமாகக் கொண்டு தனித்தனி
கூட்டுவாருமுளர். கறை - கருமை; அழுக்குமாம். கால்யாப்பு - விலங்கு. (42)

தெளியாதே யாமிழைத்த தீத்தண்டம் பொறுத்தியென
விளியாவின் னருள்சுரந்து வேண்டுவன நனிநல்கி
அளியானா மனத்தரச னவனையவ னிடைச்செலுத்திக்
களியானை விழவெய்த கௌரியனைப்* போய்ப் பணிவான்.

     (இ - ள்.) அளி ஆனா மனத்து அரசன் - தண்ணளி நீங்காத
மனத்தையுடைய மன்னன், அவனை விளியா - அவளைத் தன்னருகிலழைத்து,
தெளியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என - உண்மை
அறியாமல் யாஞ்செய்த கொடிய தண்டத்தைப் பொறுக்கக் கடவை


     (பா - ம்.) * எய்த கவலனை.