வேற்றோர் வைகல் வெளிப்படக் கண்டறஞ்
சாற்று நாவினன் வேறொன்றுஞ் சாற்றிலன்
சீற்ற மேல்கொடு செல்வன்கொல் வேனென
ஏற்றெ ழுந்தன னீன்றாள் விலக்குவாள்.
|
(இ
- ள்.) வேறு ஓர் வைகல் - மற்றொரு நாளில், வெளிப்படக் கண்டு - புலப்படக்
கண்டு, அறம் சாற்றும் நாவினன் - அறநெறியைக் கூறும் நாவினையுடையனாய், வேறு ஒன்றும்
சாற்றிலன் - பிறிதொன்றும் கூறானாயினன்; (அங்ஙனமாகவும்), செல்வன் - அவன் புதல்வன்,
சீற்றம் மேல்கொடு - சினத்தை மேற்கொண்டு, கொல்வேன் என ஏற்று எழுந்தனன் - அவனைக்
கொல்வேனென்று எதிர்ந்து எழுந்தான் ஈன்றாள் விலக்குவாள் - பெற்றவள் விலக்குவாளாய்.
அறங்
கூறியதன்றி அவனை இகழ்ந்துரைத்திலனென்க. செல்வன் என்றது இகழ்ச்சி தோன்றக் கூறியது.
நாவினன், விலக்குவாள் என்னும் முற்றுக்கள்
எச்சமாயின. (10)
தாயி லின்ப நுகர்ந்தனை தந்தையைக்
காயி லென்பெறு வாயெனக் காமுகர்க்
காயி லன்னையி லப்பனி லென்பயன்
ஏயி லின்னரு ளென்னற மென்னென்றான். |
(இ
- ள்.) தாயில் இன்பம் நுகர்ந்தனை - தாயினிடத்துக் காம
வின்பத்தினை நுகர்ந்தாய், தந்தையைக் காயில் என் பெறுவாய் என -
(இன்னும்) தந்தையைக் கொன்றனையாயின் என்ன பயனை அடைவாயோ
என்று கூற, காமுகர்க்கு - காமுகர்களுக்கு, ஆயில் - ஆராய்ந்து பார்க்கில்,
அன்னையில் அப்பனில் என் பயன் - தாயாலும் தந்தையாலும் என்ன பயன்,
இன் அருள் ஏயில் என் அறம் (ஏயில்) என் என்றான் - இனிய அருளைப்
பொருந்திலென்ன பயள் அறத்தைப் பொருந்திலென்ன பயன் என்றனன்.
தாயில்,
இல் : ஏழனுருபு. தாயிலின்பம் நுகர்ந்ததே கொடு நிரயத் துன்ப
முழத்தற்கு ஏதுவாகும்; அதனோடமையாது தந்தையைக் கொல்லுதலுஞ்
செய்யின் நீ யெய்தும் துன்பத்திற்கு அளவில்லை யாகும் என்பாள்
'தாயில்.............என்பெறுவாய்' என்றாள். காய்தல் - சினத்தல்; கோறலை
யுணர்த்திற்று. தாய் தந்தையென்னும் முறைமையாலும், அருள் அறம்
என்பவற்றாலும் என்ன பயனென்றான். ஏயில் என்பதனை அறம்
என்பதனோடுங் கூட்டுக. நேயில் எனப் பிறர் பிரித்தது பொருந்தாமையோர்க.
விலக்குவாள் என அவன் என்னென்றான் எனக் கூட்டியுரைக்க. (11)
மண்டொ டுங்கரு விப்படை வன்கையிற்
கொண்டு தாதை குரவனென் றோர்கிலான்
துண்ட மாகத் *துணித்தனன் ஆய்முகத்
துண்ட காம நறவா லுணர்விலான்.
|
(பா
- ம்.) * 'துணித்தானாய வாய்முகத்'
|