எய்யுங் கோறொடு வில்ல ரிடிக்குநேர்
செய்யுஞ் சொல்லினர் செல்லலை நில்லெனக்
கையி லுள்ளவுங் கைக்கொண்டு காரிகைத்
தைய றன்னையுந் தாங்கொடு போயினார். |
(இ
- ள்.) எய்யும் கோல் தொடுவில்லர் - எய்யப் பெறும் வாளியை
ஏறிட்ட வில்லினையுடையவராய், இடிக்கு நேர் செய்யும் சொல்லினர் -
இடியையொக்குஞ் சொல்லினையுடையராய், செல்லலை நில் என - செல்லாதே
நில் என்று (நிறுத்தி), கையில் உள்ளவும் தாம் கைக் கொண்டு - கையிலுள்ள
பொருளையும் தாம் பறித்துக் கொண்டு, காரிகை தையல் தன்னையும்
கொடுபோயினார் - அழகிய அம்மாதையுங் கைக்கொண்டு சென்றார்கள்.
செல்லலை,
அல் எதிர்மறையிடைநிலை; ஐ முன்னிலை விகுதி.
காரிகை - அழகு. (14)
சென்று சேணிடைச் சிக்கற வாழலாம்
என்ற வெண்ணமொன் றெய்திய வண்ணமொன்
றொன்று நாமெண்ணத் தெய்வமொன் றெண்ணிய
தென்ற வார்த்தை யிவனிடைப் பட்டதால்.
|
(இ
- ள்.) சேண் இடைச் சென்று சிக்கு அற வாழலாம் என்ற
எண்ணம் ஒன்று - தூரதேயத்திற் சென்று இடையூறின்றி வாழலாம் என
அவன் கருதிய எண்ணம் ஒன்று; எய்திய வண்ணம் ஒன்று - நிகழ்ந்த
செய்தி மற்றொன்று; நாம் ஒன்று எண்ணத் தெய்வம் ஒன்று எண்ணியது
என்ற வார்த்தை - 'நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது'
என்ற பழமொழி, இவன் இடைப்பட்டது - இந்த மாபாதகனிடத்திற்
புலப்பட்டது.
சிக்கற
வாழலாம் - தடையின்றாக இன்பந் துய்த்து வாழலாம்.
ஆகலான் வார்த்தை இவனிடைப்பட்டதென்க. பட்டது - வெளிப்பட்டது.
ஆல் : அசை. (15)
தாதை தன்றன யற்கினி யார்துணை
மாதர் யாயை மறவர்கைக் கொள்ளவிப்
போது தான்றுணை யென்பவன் போன்றுமா
பாத கத்துரு வாய்வந்து பற்றினான். |
(இ
- ள்.) தாதை - வெட்டுண்டிறந்த தந்தையானவன், மாதர் யாயை
மறவர் கைக்கொள்ள - அழகிய தாயை வேடர் கவர்ந்து கொண்டமையால்,
தன் தனயற்கு துணை இனியார் - தன் புதல்வனுக்குத் துணையாவார் இனி
யாவர் (என்று வருந்தி), இப்போது துணையை இழந்து வருந்தும் இப்பொழுது,
தான் துணை என்பவன் போன்று - யானே துணையாவேன் என்று
தொடர்பவனைப் போல, மாபாதகத்து உருவாய் வந்து பற்றினான் - மாபாதக
வடிவாய் வந்து அவனைப் பிடித்தான்.
|