யாய்
- தாய். தந்தையைக் கொன்ற கொலைப் பாவம் வந்து
பற்றியதனைத் தந்தை பாதகத்துருவாய் வந்து பற்றினான் என்றார். இது
தற்குறிப்பேற்றவணி. (16)
ஆவ வென்னு
மழுஞ்சிவ தாவெனும்
பாவம் பாவம் பழியிது வோவைய
கோவெ னுங்கை குலைத்தெறி யுந்நிழற்
பாவை போல விடாதுபின் பற்றுமால். |
(இ
- ள்.) ஆவ என்னும் - (அங்ஙனம் பற்றிய கொலைப் பாவமானது)
ஐயோ என்று அலறும்; அழும் - அழாநிற்கும்; சிவதா எனும் - சிவதா என்று
முறையிடும்; பழி இதுவோ பாவம் பாவம் - கொலைப் பழி இத்தன்மையதோ
பாவம் பாவம், ஐயகோ எனும் - ஐயகோ என்று புலம்பும்; கைகுலைத்து
எறியும் - கையை அசைத்து நிலத்தில் மோதும்; நிழல் பாவை போல விடாது
பின்பற்றும் - உடம்பின் சாயையாகிய நிழல் போல விடாது பின்பற்றிச்
செல்லும்.
சிவதா
என்பது சிவபெருமானை நோக்கி முறையிடுஞ் சொல்;
திருத்தொண்டர் புராணத்திலே,
"களியா னையினீ ருரியாய் சிவதா
எளியார் வலியா மிறைவா சிவதா
அளியா ரடியா ரறிவே சிவதா
தெளிவா ரமுதே சிவதா சிவதா"
|
என
வருதல் காண்க. பாவம் பாவம் பழியிதுவோ என்பதனை
ஆசிரியர் இரங்கிக் கூறியதாகக் கொள்க. பாவத்தாற் பற்றப்பட்டவனிடத்து
நிகழ்வனவற்றிற்கு அதனையே வினைமுதலாகக் கூறினார். ஆல் : அசை. (17)
[-
வேறு]
|
நல்லதீர்த்
தஞ்சிவ தலநலோர் பக்கமுஞ்
செல்லவொட் டாதரன் சீர்த்திநா மஞ்செவிப்
புல்லவொட் டாதுளம் புகுதவொட் டாதுநாச்
சொல்லவொட் டாதுகண் டுயிலவொட் டாதரோ. |
(இ
- ள்.) நல்ல தீர்த்தம் சிவதலம் நல்லோர் பக்கமும் செல்ல
ஒட்டாது - நல்ல தீர்த்தத்தினருகிலும் சிவதலத்தினருகிலும்
நல்லவர்களருகிலும் போக விடாது; அரன் சீர்த்தி நாமம் செவி புல்ல
ஒட்டாது - சிவபெருமானின் புகழும் அவன் திருப்பெயரும் செவியிற்பட
விடாது; உளம் புகுத ஒட்டாது - (ஒருக்காற்படினும்) உள்ளத்திற் புகவிடாது;
நாச்சொல்ல ஒட்டாது - (அவற்றை) நாவினாற் சொல்ல விடாது; கண் துயில
ஒட்டாது - கண்ணுறங்க விடாது.
ஒட்டாது
- இசையாது; தடுக்கும்;
|