II


132திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



[அறுசீரடியாசிரிய விருத்தம்]
அழிதகன் குறுகு வான்முன் னங்கயற் கண்ணி தந்தக்
குழையிரு காதுங் கோத்துக் கொலைகெழு* புலிப்பற் றாலி
நுழைமயிர் நெடுநாண் பின்ன னோன்பிட ரலைப்பப் பூண்டோர்
பழிதகை யாத வேடப் பாவையாய்ப் படிவங் கொள்ள.

     (இ - ள்.) அழிதகன் குறுகுவான் முன் - அத் தீநெறிப்பட்ட பாதகன்
அங்கு வருதற்கு முன், அங்கயற்கண்ணி - அங்கயற்கண் அம்மையார், தந்தக்
குழை இரு காதும் கோத்து - தந்தத்தாலாகிய குண்டலங்களை இரு
செவியிலும் நுழைவித்து, கொலைகெழு புலிப்பல் தாலி நுழை - கொலை
பொருந்திய புலியின் பல்லாகிய காலி கோத்த, மயிர் பின்னல் நெடுநாண் -
மயிராற் பின்னிய நீண்ட மங்கல நாணினை, நோன்பிடர் அலைப்பப் பூண்டு
- பெருமை பொருந்திய பிடரில் அசைந்தலையத் தரித்து, பழிதகையாத ஓர்
வேடப் பாவையாய் படிவம் கொள்ள - பழிக்குந் தன்மையில்லாத ஒரு
வேடமகளாய்த் திருவுருவங்கொள்ள.

     குறுகுவான், எச்சமாயிற்று. நுழை - கோத்தவெனப் பிறவினைப்
பொருட்டு. தகையில்லாத என்பது தகையாத என நின்றது. (21)

கொலையிரும்* பழிக்கன் றஞ்சுங் கூடலெம் பெருமான்      கொன்றை
மிலையிருங் குஞ்சி வேங்கை மெல்லிணர்க் கண்ணி வேய்ந்து
கலையிரு மருப்பிற் கோடிக் காதள வோடுந் தாடிச்
சிலையிருந் தடக்கை வேடத் திருவுருக் கொண்டு தோன்றி.

     (இ - ள்.) கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம்
பெருமான் - கொலையாலாம் பெரிய பழிக்கு அன்று அஞ்சிய மதுரையி
லெழுந்தருளிய எம்பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள், கொன்றைமிலை
இருங் குஞ்சி வேங்கை மெல் இணர்க்கண்ணி வேய்ந்து - கொன்றைமாலை
யணிந்த நீண்ட சிகையின்கண் வேங்கையின் மெல்லிய
பூங்கொத்துக்களாலாகிய மாலையையணிந்து, கலை இரு மருப்பில் கோடி
காது அளவும் ஓடும் தாடி - கலைமானின் இரு கொம்பைப் போல் வளைந்து
காது மட்டுஞ் சென்ற மீசையையும், சிலை இருந்தடக்கை - வில்லையேந்திய
நீண்ட பெரிய கையையுமுடைய, வேடத்திரு உருக் கொண்டு தோன்றி -
வேடத் திருவுருவங்கொண்டு தோன்றியருளி.

     அன்று பழிக்கஞ்சியவர் இன்று பாதகத்திற் கஞ்சினாரென்பது தோன்றக் கூறினார். முறுக்குடன் வளைந்து இருபுறமும் மேலே சென்றிருப்பதற்குக் கலை மருப்பு உவமை. தாடியும் தடக்கையும் உடையவென விரிக்க. (22)

கொண்டல்கண் படுக்கு மாடக் கோபுர மருங்கிற் போந்தின்
கண்டகக் கருக்கு வாய குரைக்குநாய் கதுவிக் காப்பப்
புண்டலை வாளி வில்லோர் புறங்கிடந் திமைப்பத் திங்கட்
டுண்டவா ணுதலா ளோடுஞ் சூதுபோ ராடல் செய்வான்.

     (பா - ம்.) * கொலையெழு.