(இ
- ள்.) கொண்டல் கண் படுக்கும் மாடக்கோபுரம் மருங்கில் -
முகில்கள் துஞ்சும் மாடங்களையுடைய கோபுரத்தின் பக்கத்தில், போந்தின்
கண்டகக் கருக்கு வாய குரைக்கும் நாய் கதுவிக் காப்ப - பனையினது
முட்களையுடைய கருக்குப் போன்ற வாயையுடைய குலைக்கின்ற நாய்கள்
சிறிதும் நீங்காது காக்கவும், புண் தலை வாளி வில் ஓர் புறம் கிடந்து
இமைப்ப - தசை பொருந்திய நுதியையுடைய கணையும் வில்லும் ஒரு
புறத்திற் கிடந்து விளங்கவும், திங்கள் துண்டம் வாள் நுதலாளோடும்
சூது போர் ஆடல் செய்வான் - திங்களின் ஒரு பாதியை ஒத்த தள்ளிய
நெற்றியையுடைய பிராட்டியோடும் சூதாடலாகிய போர்த் தொழிலைச்
செய்வானாயினன்.
கருக்கு
- மட்டையின் விளிம்பு. 'வாய' குறிப்புப் பெயரெச்சம். (23)
வெருவரு வேழ
முண்ட வெள்ளில்போல் வறிய னாகிப்
பருவர லுடனாங் கெய்தும் பாதகன் வரவு நோக்கி
ஒருவரு முள்ளத் தாலு முன்னருங் கொடிய பாவி
வருவது காண்டி யென்னா மாதரை நோக்கிக் கூறும். |
(இ
- ள்.) வெருவு அரு வேழம் உண்ட வெள்ளில் போல் வறியனாகி
- அச்சமில்லாத யானையாலுண்ணப்பட்ட விளாங்கனி போல
உள்ளீடில்லாதவனாய், பருவரலுடன் ஆங்கு எய்தும் பாதகன் வரவு நோக்கி
- துன்பத்துடன் அங்கு வருகின்ற மாபாதகனது வருகையை நோக்கி,
ஒருவரும் உள்ளத்தாலும் உன் அரும் கொடிய பாவி வருவது - ஒருவரும்
மனத்தாலும் நினைத்தற்கரிய கொடிய பாவத்தையுடையவன் வருவதை,
காண்டி என்னா - காண்பாயாக என்று. மாதரை நோக்கிக் கூறும் -
இறைவியை நோக்கிக் கூறுவான். வெருவரு - அஞ்சத்தக்க என்றுமாம்.
'வேழம்' வெள்ளிலுக்கு வருவதோர் நோய் என்பர் நச்சினார்க்கினியர்;
"தூம்புடை நெடுங்கை
வேழந் துற்றிய வெள்ளில்" |
என்னும் சிந்தாமணி
யடியின் உரையை நோக்குக; ஓர் கொதுகு
என்பாருமுளர். வறியன் - மகிழ்ச்சி என்பது சிறிதுமில்லாதவன். காண்டி -
காண்பாய், ட் : எழுத்துப் பேறு. (24)
அணங்குநோ யெவர்க்குஞ் செய்யு மனங்கனா லலைப்புண் டாவி
உணங்கினா ருள்ளஞ் செல்லு மிடனறிந் தோடிச் செல்லா
குணங்குல னொழுக்கங் குன்றல் கொலைபழி பாவம் பாரா
இணங்குமின் னுயிர்க்கு மாங்கே யிறுதிவந் துறுவ தெண்ணா.
|
(இ
- ள்.) எவர்க்கும் அணங்கு நோய் செய்யும் அனங்கனால்
அலைப்புண்டு - யாவர்க்குங் காமநோயைச் செய்கின்ற மாரனாலே
அலைக்கப்பட்டு, ஆவி உணங்கினார் உள்ளம் - உயிர் சோர்ந்தவர்களின்
உள்ளங்கள், செல்லும் இடன் அறிந்து ஓடிச் செல்லா - செல்லுதற்குரிய
இடத்தினை அறிந்து சென்று சேரா; குணம் குலன் ஒழுக்கம் குன்றல் -
குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும், கொலை பழி பாவம் -
|