கொலையும் பழி பாவங்களும்
உண்டாதலையும், பாரா - பார்க்கமாட்டா;
இணங்கும் இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து உறுவது எண்ணா -
பொருந்திய தம் இனிய உயிர்க்கும் அவ்விடத்தே அழிவு வருதலையும்
எண்ணமாட்டா.
எவர்க்கும்
- எத் தன்மையோர்க்கும். இடங்கழிகாமத்தால் வருந்தினா
ரென்பார் 'அலைப்புண்டாவி யுணங்கினார்' என்றார். செல்லுமிடன் -
மணத்தற்குரிய கன்னியர் மனைவி காமக் கிழத்தியர் என்னுமிடங்கள்.
குன்றலையும் கொலை முதலியன உண்டாதலையும் என விரிக்க, ஆங்கே
என்பதற்கு அவ்வாறே என்றும்; அப்பொழுதே என்றும் உரைத்தலுமாம். (25)
கள்ளுண்டல் காம வென்ப கருத்தறை போக்குச் செய்வ*
எள்ளுண்ட காமம் போல வெண்ணினிற் காணிற் கேட்கிற்
றள்ளுண்ட விடத்தி னஞ்சந் தலைக்கொண்டா லென்ன வாங்கே
உள்ளுண்ட வுணர்வு போக்கா துண்டபோ தழிக்குங் கள்ளூண். |
(இ
- ள்.) கள்உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச்
செய்வ - கள்ளுண்ணலும் காமமும் என்று சொல்லப்படுமிரண்டும் அறிவினை
நீங்குமாறு செய்வன; கள் ஊண் - (அவற்றுட்) கள்ளுணவானது, எள்ளுண்ட
காமம் போல - இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினில் காணில்
கேட்கில் தள்ளுண்ட இடத்தில் - எண்ணினும் காணினும் கேட்கினும்
தவறுதலுற்ற இடத்தினும், நஞ்சம்தலைக் கொண்டால் என்ன - நஞ்சு
தலைக்கேறியது போல, ஆங்கே - அப்பொழுதே, உள் உண்ட உணர்வு
போக்காது - உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது, உண்ட போது
அழிக்கும் - உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.
என்ப
- என்பன; வினைப்பெயர்; என்று கூறுவர் என்றுமாம்.
அறைபோக்கு - அறை போதல்; உள்ளதுபோல் ஒழிதல். காமத்திற்கேற்றும்
பொழுது - காமுறப் பட்டாரை எண்ணுதல் முதலிய செய்த விடத்தென்று
கொள்க. எண்ணினில், இன் வேண்டாவழிச் சாரியை. தள்ளுண்ட இடம் -
கிடைக்காவழி; விடத்தின் நஞ்சம் எனப் பிரித்து ஒரு பொருளிரு சொல்லாகக்
கொள்ளலுமாம். கள்ளுண்டலும் காமமும் உணர்வினை யிழப்பித்தலால்
ஒக்கும்; எனினும், கள்ளூண் காமம் போல உணர்வு போக்காது உண்டபோது
அழிக்கும் என ஒப்புமையும் வேற்றுமையும் கூறினமையின் இது
வேற்றுமையணி.
"உள்ளக் களித்தலுங்
காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு" |
என்னுங் குறள் ஒருபுடையொத்து
நோக்கற்பாலது. (26)
காமமே கொலையுட்
கெல்லாங் காரணங் கண்ணோ டாத
காமமே களவுக் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சுங்
காமமே கள்ளுண் டற்குங் காரண மாத லாலே
காமமே நரக பூமி காணியாக் கொடுப்ப தென்றான். |
((பா
- ம்.) * செய்வது.
|