II


மாபாதகந் தீர்த்த படலம்135



     (இ - ள்.) காமமே கொலைகட்கு எல்லாம் காரணம் - காமமே
கொலைகளுக்கு எல்லாம் காரணமாயுள்ளது; கண்ணோடாத காமமே களவுக்கு எல்லாம் காரணம் - கண்ணோட்டமில்லாத காமமே களவு அனைத்திற்குங் காரணமாகும்; கூற்றம் அஞ்சும் காமமே கள் உண்டற்கும் காரணம் -
கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும்;
ஆதலாலே, காமமே நரகபூமி காணியாக் கொடுப்பது என்றான் -
ஆதலினாலே, காமமொன்றே (அவையனைத்தாலு நேரும்) நரக பூமியைக்
காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.

     காமமே என்பவற்றி னேகாரங்கள் தேற்றமும் பிரிநிலையுமாம்.
கண்ணோடாத காமம் - தன்னையுடையாரைக் கண்ணோட்டமின்றி வருத்தும்
காமம். ஐம்பெரும்பாதகங்களுள் கொலை களவு கள் என்பவற்றை
எடுத்தோதினமையின் இனம் பற்றிப் பொய்யையுங் கொள்க. காணியா -
உரிமையாக; ஈறு தொக்கது. (27)

கொலைப்பழி கோட்பட் டாங்கே குறுகியான் முகங்கண டேட
அலைப்பட ருழந்து சாம்பி யழிவதென் பார்ப்பா னென்னக்
கலைப்படு திங்கள் வேணிக் கானவ னருட்க ணோக்கந்
தலைப்படச் சிறிது பாவந் தணிந்துதன் னறிவு தோன்ற.

     (இ - ள்.) கொலைப்பழி கோள்பட்டு ஆங்கே குறுகியான் முகம்
கண்டு - கொலைப் பாவத்தால் விழுங்கப்பட்டு அவ்விடத்தை யடைந்தவனது முகத்தை நோக்கி, ஏட பார்ப்பான் - ஏடா பார்ப்பானே, அலைப்படர்
உழந்து சாம்பி அழிவது என் என்ன - அலைத்தலையுடைய துன்பத்தால்
வருந்திவாடி மெலிவது என்னை என்று வினாவியருள, கலைப்படு திங்கள்
வேணிக் கானவன் அருள் கண் நோக்கம் சிறிது தலைப்பட - ஒரு
கலையினைப் பொருந்திய பிறையையணிந்த சடையையுடைய வேடனாகிய
சோமசுந்தரக் கடவுளின் திருவருட்பார்வை சிறிது தலைப்படுதலால், பாவம்
தணிந்து தன் அறிவு தோன்ற - பாவங் குறைந்து தனது முன்னையுணர்வு
தோன்றா நிற்க.

     பழி கோட்பட்டு, தம்மினாகிய தொழிற்சொல் வர வலியியல்பாயிற்று.
அலை : முதனிலைத் தொழிற்பெயர்; "அலைமேற் கொண்டு" என்புழிப்போல.
வேணிக் கானவன் - வேணியையுடைய வேடன், வேணியாகிய
காட்டையுடையன் என இரு பொருள் தோன்ற நின்றது. பாவம் முழுது
மொழிதல் பின் கூறப்படுதலின் ஈண்டுச் சிறிது தணிந்தென்றலுமாம். (28)

முற்பக லிழைத்த பாவ முதிர்ச்சியால்* பிறந்து தந்தை
தற்பக+னான வாறுந் தாதையை வதைத்த வாறும்
பிற்பக லந்தப் பாவம் பிடித்தலைத் தெங்குந் தீரா
திப்பதி புகுந்த வாறு மெடுத்துரைத் திரங்கி நின்றான்.

     (பா - ம்.) * பாவமுயற்சியால். +தற்பகை.